அத்தியாயம் - 1

9.7K 177 45
                                    

"நான் கேட்ட  ஃபைல் எது? நீ எடுத்து வச்சிருக்க ஃபைல் நவீன்! எல்லாத்தையும் நானே பார்த்துகனுமுன்னா நீ எதுக்காக எனக்கு PA வா இருக்க?" என்று கையில் இருந்த நீல கலர் ஃபைலை எடுத்து காரின் போனட் மீது வீசினான் நிதுல் தரேன். 

"சாரி சார்.  ஃபுளு கலர் ஃபைல்ன்னு இதை எடுத்து வச்சிட்டேன்." என்று நவீன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு கூற 

"முட்டாள் மாதிரி பேசாதே நவீன்.  ஃபைல் கலரை வச்சு பார்க்க நீ என்ன LKG குழந்தையா? உள்ளே என்ன இருக்குன்னு ஒன்னுக்கு இரண்டு முறை பார்க்க வேண்டாமா?" என்று நிதுல்தரேன் கேட்க 

"சாரி சார். நம்ம ஷாலுதான் எடுத்து வச்சா." என்று நவீன் கூற 

"என்ன நம்ம ஷாலுவா? அவ என்ன நமக்கு ஒட்டா, உறவா? நீ வேணா அவளை உரிமை கொண்டாடிக்க.  எனக்கு வேண்டாம் அவ உறவு. என் கம்பெனிக்கு அவ வந்து இரண்டு மாசம்தான் ஆகுது.  என்ன போஸ்ட்ல வந்தா தெரியுமா? டைபிஸ்ட் போஸ்ட்க்கு வந்தா.  ஆனா அவ மூக்கை நுழைக்காத இடமே இல்லை.  என் ரூமில் இருக்கும் ஃபைலுல அவளுக்கு என்ன வேலை? என் ரூமில் ஒரு ஃபைல் இருக்குன்னா அது எவ்வளவு முக்கியமானதா இருக்கும்.  அதை போய் அவட்ட எதுக்கு கொடுத்த? இன்னைக்கு இருக்கும் முக்கியமான மீட்டிங்கில் அந்த ஃபைல் இல்லாம நான் என்ன செய்ய முடியும்? இன்னும் பத்து நிமிஷத்தில் மீட்டிங் தொடங்கிடும். நூறு  கோடி ப்ராஜெக்ட்.  போச்சா...!" என்று நிதுல்தரேன் காலால் தரையை ஓங்கி அடித்துக்கொண்டிருக்க ஒரு பைக் வேகமாக வந்து நின்றது.  நவீன் செய்த தவறுக்காக தலையை குனிந்துக்கொண்டு நின்றான்.  

"நவீன் அண்ணா....ஏய் நவீன் பக்கி சீக்கிரம் வா." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க இரு ஆண்களும் அந்த பக்கம் திரும்பினார்கள்.  

"ஷாலு..." என்று நவீன் கூவ, நிதுல்தரேன் முறைத்தான்.  அவன் முறைப்பை பார்த்துவிட்டு 

"மதுஷாலினி" என்று அவளின் முழு பெயரை கூறிக்கொண்டே அவளை நோக்கி சென்றான் நவீன். 

"இதை பிடிடா அண்ணா.  சரியான ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம் பழம் பைக்கா இருக்கும் போல.  ஸ்டான்ட் போட முடியல. யானை கனம் கனக்குது.  எப்படித்தான் இதை அந்த நரம்படி சுந்தரம் ஓட்டிட்டு போறானோ! கீழே விழுந்தா அப்புறம் அந்த தெருவு நாய்க்கு நல்ல வேட்டை.  இந்த பைக் அவன் மேலே விழுந்த பிறகு அவன் உயிரோடு இருப்பான்! விழுந்த வேகத்தில் நல்லி எலும்பு எல்லாம் தெறிச்சு போயிடும் அவனுக்கு." என்றவள் கஷ்டப்பட்டு அந்த பைக்கில் இருந்து இறங்க முயல, நவீன் பைக்கை பிடித்து அவளுக்கு உதவினான்.  

கொஞ்சும் கவிதை நீயடிDonde viven las historias. Descúbrelo ahora