"ச்சை என்ன பாஷை பேசுறானுங்களோ! மூக்காலையே காத்து நை நைன்னு. இப்போபார்த்தா அந்த கிழவி வழுக்கி விழனும். இன்னும் பத்து நாலு பொறுத்துக்க கூடாதா?" என்று புலம்பினார் ஷாமளா மகளிடம்.
"அம்மா விடும்மா. வர வினை எல்லாம் சொல்லிகிட்டா வருது. நான் வேற யாரையாச்சும் ஏற்பாடு செய்யுறேன். என்னால இப்போ அங்கே வர முடியாது. ஆதவன் சாரும் சஸ்பென்ட் முடிஞ்சு இப்போத்தான் டூட்டில ஜாயின் ஆகியிருக்காரு. அவராலையும் அங்கே வரமுடியாது. அப்பாவை வச்சு கொஞ்சம் சமாளி." என்று மதுஷாலினி கூற
"உங்க அப்பாவை வச்சு என்னத்தை சமாளிக்க. அவருக்கு தெரிந்தது எல்லாம் ஓட்டும், அதுக்கு துட்டும்மட்டும்தான். தமிழைத்தவிர அவருக்கு வேற எந்த பாஷையும் தெரியாது. அவருக்கு தெரியாதுன்னுதான் அவரு அந்நியமொழி புறக்கணிப்புன்னு பஸ்டான்ட் பஸ்டாண்டா கோஷம் போட்டுட்டு திரிவாரு." என்றாள் ஷாமளா.
"வேற என்ன செய்ய? நான் ஆதவன் சாருக்கு போன் போட்டு கேட்கிறேன்." என்று இவள் போனை வைத்துவிட்டு ஆதவனை தொடர்புக்கொண்டாள்.
"ஒரு இரண்டு நாள் சமாளித்தால் போதும். வேற ஆட்களுக்கு சொல்லியிருக்கிறேன்." என்றான் அவன். அதுவரை இங்கே இருந்தே டாக்டரிடம் பேசிவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் அங்கே உள்ள டாக்டர் பேசிய பாஷையை இங்கே இருந்து புரிந்துக்கொள்ள இவர்களுக்கும் சிரமாக இருந்தது.
"முடியாது சார். அந்த வெளுந்த தலையன் என்ன பேசுறான்னு அவனையே உத்து பார்த்து பார்த்து எனக்கு கண்ணு கெட்டுப்போச்சு. சும்மாவே சோவாரிட்டு எழும்பும் தோலுமா ஆகிட்டேன்னு என் ஆளு கழுவி கழுவி ஊத்துறான். இதுல கண்ணும் போயிட்டா அப்புறம் நான் அவனை மறந்துற வேண்டியதுதான்." என்றவள் யோசிப்பது போல இருந்துவிட்டு
"சார் அவனிடம் கேட்டா என்ன? அவன்தான் ஆங்கிலோஇண்டியன் ஸ்கூல்ல படிச்சதா பெருமை பேசிட்டு இருப்பான்." என்றாள் மதுஷாலினி. உடனே ஆதவனும் அவளும் புறப்பட்டு சென்றார்கள் அவன் வீட்டுக்கு. அங்கே அண்ணனும், தம்பியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். நலம் விசாரிப்பு, உபசரிப்பு எல்லாம் முடிந்து
BẠN ĐANG ĐỌC
கொஞ்சும் கவிதை நீயடி
Lãng mạnஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை...