"சார் எனக்கு ஒரு நாளு நாள் லீவு வேணும்." என்று கேட்டுக்கொண்டு தன் முன்னே நின்றவளை பார்த்தவன்
"எதுக்குன்னு கேட்கமாட்டேன். நாலு நாள் மட்டும் போதுமான்னுதான் கேட்பேன். உனக்கு எத்தனை நாள் லீவு வேணுமோ அத்தனை நாள் எடுத்துக்க. நான் நிம்மதியா இருப்பேன்." என்று அவன் கூற
"அப்படி உங்களை என்ன முறிச்சு விழுங்கிடாங்க? மூஞ்சை பாரு!" என்று அவள் கூற 'நல்லா பார்த்துக்கோ' என்பது போல அவன் அவளை பார்க்க
"நல்லாத்தான் இருக்கு. ஸ்டூல் போட்டு நிக்கிறவனுக்கு எகத்தாளத்தை பாரேன். பனைமரம்." என்றவள்
"போயிட்டு வரேன்." என்று திரும்பினாள்.
"வராதே போ" என்று சொல்ல துடித்த நாக்கு வேறு பேசி அவனுக்கு எதிராக சதி செய்தது.
"பார்த்து போ" என்று.
"சோலி முடிஞ்சு" என்று அவன் மனதிற்குள் நினைக்க, அவன் நினைத்தது சரி என்பது போல விரிந்த கண்களுடன் திரும்பியவள்
"எங்கே பார்த்து போகணும்?" என்று கேட்டாள்.
"முன்னே ரோட்டை பார்த்து போன்னு சொன்னேன். கனவு கண்டுட்டே போயி நடுராத்திரியில் எவனுக்கு முன்னேவாது சாடி கத்திக்குத்தி வாங்கிட்டு வந்து என் உயிரை வாங்காதே! உன்னை போல வீணா போன ஒரு வெட்டி எம்ப்ளாயிக்கு எல்லாம் இவ்வளவு மெடிக்கல் அலொவன்ஸ் கொடுக்க முடியாது. அதான் பார்த்து போன்னு சொன்னேன்." என்று அவன் கூற
"டேய் மங்குஸ் சும்மா வாயை வச்சுட்டு இருக்கல, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!" என்றாள் பல்லை கடித்துக்கொண்டு
"என்ன டேய் ஆஆ! டேய் சொன்ன அப்புறம் நான் டீ சொல்லுவேன்." என்றான் அவனும் சூடாக.
"அதெல்லாம் சொல்லமாட்ட. வைஃப்பை மட்டும்தான் டீ போட்டு கூப்பிடுவாங்க. இப்போ பெஸ்டியையும் கூப்பிடுறாங்க. நான் உங்களுக்கு இரண்டும் இல்லையே!" என்றாள் அவள்.
"கிளம்பு தாயே! நாலு நாள் இல்ல நாற்பது நாள் லீவு எடுத்துக்கோ. சம்பளத்தோட லீவு உனக்கு." என்றான் அவன்.
![](https://img.wattpad.com/cover/309576724-288-k891570.jpg)
ESTÁS LEYENDO
கொஞ்சும் கவிதை நீயடி
Romanceஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை...