"என்ன சொல்றிங்க? எதுக்காக அப்படி சொல்லணும் ? என்று மதுஷாலினி தாயார் ஷாமளாவிடம் நிதுல்தரேன் அதிர்ச்சியுடன் கேட்க
"ஐய்யோ மாப்பிளை தப்பா நினைக்காதிங்க. நான் உங்களை பிரிச்சிடமாட்டேன். நான் சொன்னாலும் அவ கேட்டுடமாட்டா. அவ அடுத்த முகூர்த்தத்தை பார்க்க சொன்னா. ஆனா அவளுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லையாம். ஒரு நாப்பத்தெட்டு நாள் கழிக்க சொன்னாரு ஜோசியரு. அப்புறம் அவ குளிப்பா! அப்படி இப்படின்னு இரண்டு மாசம் ஆயிபுடும். அடுத்தாப்புல ஒரு நல்ல நாளு இருக்கு. அப்போ கல்யாணத்தை ஜாம் ஜாமுன்னு வச்சிக்கலாம்."என்று ஷாமளா சொல்ல நிதுல்தரேன் அந்த தாயை வியப்புடன் பார்த்தான்.
எல்லா தாய்க்கும் உள்ள சிறப்புத்தான் இது. அதுவும் பெண் பிள்ளையை பெற்ற தாயுக்கு புத்தி எப்போதும் இரண்டு மடங்கு கூர்மையாக இருக்கும். மகள் யாருடன் பேசுகிறாள்? என்ன பேசுகிறாள்? எந்த மாதிரி உடை உடுத்துகிறாள்? எங்கே செல்கிறாள்? நேரத்திற்கு வருகிறாளா? என்றெல்லாம் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து கணிக்கிற நவீன ரக கணினி ஒரு தாய். தன் மகளின் மாதத்தை கூட எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கணிக்கிற தாய் என்றுமே ஒரு வரம்தான் பெண் பிள்ளைகளுக்கு.
ஷாமளா கூறியதில் லேசாக சிரித்தவன் "ஆனா அவ ஒத்துக்கமாட்டாளே!" என்றான் நிதுல்தரேன்.
"உங்க பேச்சுக்கும் அவட்ட மதிப்பு இல்லையா?" என்று ஷாமளா கேட்க
"மதிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை இல்லையா? என் பேச்சை கேட்டுட்டா மட்டும் அவ எனக்கு மரியாதை கொடுக்கிறதா, மதிப்பு கொடுக்கிறதா ஆயிடுமா? உறவுக்குள் என்ன மதிப்பு, மரியாதை எல்லாம். அவ வாழ்க்கை அவ விருப்பப்படிவாழத்தானே! அவ சந்தோசமா இருக்கிறதுல ஒன்னும் தப்பு இல்லையே!" என்று நிதுல்தரேன் கூற ஷாமளா முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி. இதைவிட ஒரு சந்தோசம் ஒரு தாயுக்கு என்ன வேண்டும். மகள் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைந்துவிட்டால் வேறு ஒரு பேறு என்னவுண்டு தாயவளுக்கு.
ŞİMDİ OKUDUĞUN
கொஞ்சும் கவிதை நீயடி
Romantizmஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை...