அத்தியாயம் -23

1.6K 99 4
                                    

தன் எதிரே கண்ணை உருட்டிக்கொண்டு நின்றவளை பார்த்த அகில்தருண்

"தரு இவளை கூட்டிட்டு கிளம்பு. சின்ன பிள்ளை மாதிரி உளறிட்டு இருக்கா." என்று அவன் கூற

"சின்ன பிள்ளையா இருந்தா சொல்றது எல்லாம் உளறலா இருக்கனுமா என்ன? உங்க தம்பிதான் எனக்கு உயிரு. நிது இல்லன்னா நா செத்துடுவேன். அது தெரிஞ்சுதான் உனக்காக உயிரை கொடுக்க துணிஞ்ச பிறகும் எனக்காக மனசை கொடுத்தான் அவன். எனக்கு நல்லாவே தெரியும், இப்போ நான் எடுக்க போற ஸ்டேப்பில் கொஞ்சம் ஸ்லிப் ஆனா கூட நான் என் நிதுவையும் சேர்த்து இழந்திடுவேன்னு. தெரிஞ்சுதான் நான் இந்த ரிஸ்க் எடுக்கிறேன். இப்படியே ஒவ்வொருத்தனையா கொலை செய்துட்டு நீங்க போனா நீங்கதான் நிம்மதியா இருக்க முடியுமா? இல்ல இவருதான் நிம்மதியா இருப்பாரா? நீங்க இப்படி ஒளிஞ்சு வாழ்ந்தா விசாலியை எப்படி பழையப்படி பார்க்க முடியும். இந்த காட்டில்வச்சு அவளை எப்படி குணமாக்க முடியும். உலகத்துல எத்தனையோ சிகிட்ச்சை இருக்கு. அதை செய்யாம இப்படி ஓடி ஒளிஞ்சா என்ன அர்த்தம்?

இப்போ நாம எடுக்க போற முயற்சில தோல்வியடைஞ்சா என்ன ஆகிவிட போகிறது. நீங்க ஜெயிலுக்கு போக போறிங்க, இல்ல என் நிது போவான்." என்று சொல்லும் போதே அவள் கண்ணில் கண்ணீர் உருண்டு ஓடியது.

"மதூ" என்று அதட்டிய நிதுல்தரேன் குரலில் அன்பு மட்டுமே இருந்தது.

"அழல" என்றவள் மூக்கை உள்ளே இழுத்துக்கொண்டு

"உங்க இரண்டு பேரில் யாரு உள்ளே போனாலும் நிச்சயம் போராடி தண்டனையை குறைச்சிட முடியும். கண்டிப்பா ஒரு பங்கு மக்கள் நமக்கு உதவிக்கு வருவாங்க." என்று மதுஷாலினி கூறிக்கொண்டு இருக்க

"அதுக்கு என் விசாலிக்கு நடந்த கொடுமை வெளியே வரும்." என்றான் அகில்தருண் அழுத்தமாக.

"வந்தா என்ன ஆயிடும்? ஆங் என்ன ஆயிடும்? இந்த கொடுமை வேறு வகையில் ஒரு ஆணுக்கு நடந்திருந்தா என்ன நடந்திருக்கும்? ஒன்னும் நடந்திருக்காது. ஏதோ சகதியை மிதித்தது போல கடந்து போயிருப்பிங்க. அப்படி நினைங்க. வெறும் உடம்பு தீர்மானிக்காது பெண்ணின் ஒழுக்கத்தை. நான் ஒத்துக்குறேன் , இந்த மாதிரி ஒரு கொடுமையை யாராலையும் தாங்கிக்கவே முடியாதுன்னு. ஆனா அது நடந்திடிச்சு. அதுக்காக இப்போ அழுது என்ன பிரயஜோனம்? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மாதிரி அத்துமீறலை பெண்களுக்கு எதிரா பண்ணிட்டு, அதுக்காக பெண்களையே தண்டிச்சிட்டு இருப்பிங்க? எதுக்காக இப்போ விசாலி இப்படி பிணமா இருக்கணும்? அவளும் எல்லா பெண்களையும் போல வாழ்வாள். அவளை வாழ வைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கு. இப்போ அவளுக்கு நீங்க செய்துட்டு இருக்கிறது கொடுமை." என்று இவள் ஆத்திரத்துடன் பேச

கொஞ்சும் கவிதை நீயடிDonde viven las historias. Descúbrelo ahora