அத்தியாயம் - 13

1.6K 102 2
                                    

ஒரு கொலை கேசு பின்னே அலைந்துக்கொண்டு இருந்தவளை நிதுல்தரேன் காரும், அவனுடன் அந்த காருக்குள் இருந்த பெண்ணும் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களை துரத்தி வந்து பார்த்தால், ஹோட்டல் உள்ளே விடமாட்டேன் என்று ஒருத்தன் மல்லுக்கட்டினான். அவனையும் நவீன் மூலம் சமாளித்து மதுஷாலினி உள்ளே சென்று பார்த்தால் அங்கே இவள் தேடி வந்தவர்களை காணவில்லை.

'எங்கேடா போய் தொலைஞ்சுதுக? ஒரு வேலை ரூம் ஏதாச்சும் புக் பண்ணிருக்குதுங்கலா?' என்ற சந்தேகம் இவளுக்குள் வர

"நோ... அப்படிமட்டும் இருந்தா இன்னைக்கு பேபி நீ செத்த. இந்த கையாள உன்னை கொன்னே போட்டிடுவேன்." என்றவள் மீண்டும் நவீனுக்கு போன் போட்டாள்.

"டேய் அண்ணா அதுகளை இங்கே காணவில்லையே! நீ சாப்பிட டேபிள் புக் பண்ணி கொடுத்தியா? இல்ல ரூம் ஏதாச்சும் புக் பண்ணி கொடுத்து அங்கிள் வேலை பார்த்து கொடுத்தியா?" என்று இவள் படபடக்க

"அடச்சீ... அது வாயா? இல்ல கூவமா? என்ன பேச்சு பேசுற நீ. உன்னை எல்லாம் அடிச்சு வளர்த்திருக்கணும்." என்று நவீன் இவளை திட்ட

"நாளைக்கு வந்து என் முதுகை உனக்கு காட்டிட்டு நிக்குறேன். நீ அடிச்சாலும் சரி, நாலு மிதி மிதிச்சாலும் சரி. இப்போ நீ என்ன செய்து வச்ச? இதுக எங்கே போச்சுன்னு மட்டும் சொல்லு. ஃபிரசர் ஏறுது எனக்கு. இப்படியே விட்டா நான் இங்கேயே நெஞ்சு வெடிச்சு செத்து போயிடுவேன்." என்று அவள் கூற

"எல்லாத்திலும் உனக்கு அவசரம். அவங்க நார்மலா எல்லோரும் இருந்து சாப்பிடுற பிளேசில் இருக்கமாட்டாங்க. அந்த ஹோட்டலில் ஒரு கார்டன் உண்டு. அங்கே இருந்து பேச, சாப்பிட வசதி பண்ணி வச்சிருப்பாங்க. அங்கே யாரிடமாவது ஓப்பன் கார்டன் எங்கே இருக்குன்னு கேட்டுட்டு போ." என்றான் நவீன்.

"நன்றி தெய்வமே...உனக்கு ஒரு பெரிய நன்றி. நாளைக்கு வந்து உனக்கு தேங்கா சாத்துறேன்." என்றவள் போனை வைத்துவிட்டு அவளை கடந்து போன ஒரு பெண்ணிடம் இடத்தை கேட்டுக்கொண்டு அங்கே ஓடினாள். அங்கே சென்றால் அங்கே ஜோடி ஜோடியாக இருந்து பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் இருந்தார்கள்.

கொஞ்சும் கவிதை நீயடிDonde viven las historias. Descúbrelo ahora