அத்தியாயம் - 17

1.7K 120 13
                                    

வந்த வேலையை மறந்து சொந்த வேலையில் ரொம்பவே மும்மரமாகி போனாள் மதுஷாலினி.  தன் மன நாயகனின் கையை பிடித்துக்கொண்டு நடந்து போவதில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! கையை பிடித்துக்கொண்டு போகும் போதும் அவள் சில இடத்தில் தடுமாற 

"செட் ஆகாததை எதுக்குடா உடுத்துற! நான் சும்மா உன்னை வெறுப்பேத்த அப்படி சொன்னேன். அதுக்கு போய் இப்படி கட்டிட்டு வந்து நிற்பியா!" என்று இவன் கேட்க 

"உனக்காக கட்டிட்டு வந்தேன்.!" என்றாள் அவள்.  

"எனக்காக எதுவும் செய்யுறதா இருந்தா என்னைவிட்டு விலகி போ.  அதுதான் எனக்கு ரொம்ப சந்தோசத்தை கொடுக்கும்.  அவஸ்தையை இருக்கு இதெல்லாம் எனக்கு.  பிடிக்காததை செய்ய என்னை எதுக்காக வற்புறுத்துற?" என்று அவன் எரிச்சலுடன் கேட்கவும் அவர்கள் செல்ல வேண்டிய அறை வரவும் சரியாக இருந்தது.  

மனசு வலிக்க அவனை பார்த்தவளிடம் "உள்ளேதான் இருக்கான்.  மயக்கத்தில் இருப்பான்.  போய் பார்த்துட்டு வா." என்று அவளை உள்ளே அனுப்பிவைத்துவிட்டு இவன் வெளியே நின்றுக்கொண்டான்.  கையில் ஒரு மாஸ்க் வேற கொடுத்து அனுப்பினான். அவள் அதை போட்டுக்கொண்டு உள்ளே சென்றாள்.  வசந்தனை அழைத்து வந்ததில் ஒருத்தன் அவனுடன் நின்றிருந்தான்.  இவளை பார்த்து அவன் ஒதுங்கிக்கொள்ள இவன் வசந்தன் அருகில் சென்று அவன் முதுகில் இருந்த டாட்டுவை பார்த்துவிட்டு, அதை ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டாள்.  எடுத்துவிட்டு வெளியே வந்தாள்.  நிதுல்தரேன் வெளியே இவளுக்காக காத்திருந்தான்.  

"என்ன பார்த்தாச்சா? போட்டோ எடுத்திருப்பியே! போலாமா?" என்று கேட்டான் கையை அவளிடம் நீட்டிக்கொண்டு.

"தாங்க்ஸ். நீங்க கிளம்புங்க. இனி நான் போயிடுவேன்." என்று அவள் கூற 

"அதுக்குள்ள கோபம் வந்திடுச்சா! நான் எப்பவும் இப்படித்தானே பேசுறேன்.  உனக்கு ஏன் திடீர் திடீருன்னு கோபம் வந்திடுது.  இருக்கிற குறையுடன் யாரையும் ஏத்துக்குற மனபக்குவம் இருந்தால்தான் நீ நிம்மதியா இருக்க முடியும். சுட்டு போட்டாலும் எனக்கு கண்ணே, கண்மணியேன்னு வசனம் பேச வராது.  நான் இப்படித்தான் திட்டிட்டே இருப்பேன்.  அதான் உன்னை விலகி போக சொல்றேன். வா, உன்னை பத்திரமா உன் இடத்தில் விட்டாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்." என்று இவன் கூற 

கொஞ்சும் கவிதை நீயடிNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ