அத்தியாயம் 14

1.5K 109 3
                                    

"போனை எடுப்பானோ? இல்லையோ! போன வாரம் ஒரு தரமான சம்பவம் பண்ணிட்டு வந்தேன். அப்போ ரொம்ப டீசன்டா இருந்துகிட்டான்.  அப்புறம் வச்சிக்கலாமுன்னு நினைச்சிருப்பான்.  இப்போ என்னவெல்லாம் சொல்ல போறானோ!" என்று கூறிக்கொண்டே  மதுஷாலினி நிதுல்தரேன் நம்பரை டயல் செய்ய 

"எவ்வளவு பெரிய திறமைசாலியான பொண்ணா இருந்தாலும் காதல், கல்யாணமுன்னு வந்துட்டா ஒருத்தனுக்கு அடிமையா போக ரெடி ஆயிடுறாங்க இல்ல!" என்றான் ஆதவன்.  

"அதுதான் உங்க இனத்தொட கெத்து.  எப்படிப்பட்ட அடங்காத குதிரையையும் அடக்கி ஆளும் வித்தையை கையில் வச்சிருக்கிறிங்க. கிரேட்" என்று பொத்தாம் பொதுவாக ஆணினத்திற்கு ஒரு பெரிய ஐஸ் பாரை தூக்கி வைத்துவிட்டு நிதுல்தரேன் போனை எடுப்பதற்காக காத்திருந்தாள் மதுஷாலினி.  

"சொல்லுடா." என்றான் அவன் எடுத்த எடுப்பில்.  ஒரு ஹலோ கூட இல்லை.  போன் ஸ்பீக்கரில் இருந்தது.  

"தூங்கிட்டு இருந்தியா பேபி!" என்று இவள் கேட்க 

"இந்த நேரத்தில் வேற என்ன பண்ணிட்டு இருப்பாங்க.  உன்  சிஐடி வேலை இன்னுமா முடியல.  தூங்காமல் எதுக்காக இப்படி  தூங்குறவனை எழுப்பி வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க.  நான் இருக்கும் கோபத்தில் கையில் சிக்கினன்னு வை, அப்படியே ஜூஸ் பிழிஞ்ஜிடுவேன்.  சந்தேக பேயே! உனக்கு தெரியாமலா கல்யாணம் பண்ணிக்க போறேன். முதல் பத்திரிக்கை உனக்கு வச்சுட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பேன்." என்று அவன் கூற ஸ்பீக்கரில் இருக்கிறது என்று மறந்து போய்விட்டாள் போல. 

"ஆங் நீ நல்லா எவளையாவது காரில் ஏத்திகிட்டு  காக்க காக்க சூரியா மாதிரி டூயட் பாட போயிட்டு இருப்ப.  நாங்க வாயை மூடிட்டு அதை பார்த்துட்டு போயிட்டே இருக்கணுமோ!  மவனே செஞ்சிடுவேன்." என்று இவள் குதிக்க ஆதவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அவள் தோளில் தட்டி அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு கேட்கவேண்டியதை கேட்டும்படியாக செய்கை செய்தான்.  

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now