"சார் சிட்டில இந்த மாதிரி கொலைகள் நடக்குறது இப்போல்லாம் ரொம்ப சாதாரணமா போச்சு! தமிழ்நாட்டு போலீஸ் திறமையானவங்கன்னு உலகமெங்கும் பேசிக்கிறாங்க. ஆனா உங்களால இந்த சென்னையில் மட்டுமில்லாமல் சுற்றி இருக்கும் பல இடங்களில் இப்படி அடிக்கடி நடக்கும் கொலைகளை தடுக்க முடியலையே! இதுக்கு உங்க பதில் என்ன?" என்று ஒரு ரிப்போர்டர் சிட்டி கமிஷ்னரை கேள்வி கேட்க
"கேள்வி கேட்கிறது ஈஸி! ஆனா அதுக்கான பதிலை சொல்றது ரொம்ப கஷ்டம். நாங்க தனிப்படை வச்சு குற்றவாளியை தேடிட்டுத்தான் இருக்கோம். கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். ரிப்போர்டர்ஸ் நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி எங்களையே குற்றவாளியா ஆக்க கூடாது. இப்போ எல்லாம் தப்பு செய்கிறவனுக்கு மூளை போலீஸ்சை விட அதிகமா வேலை செய்யுது. நடந்து முடிஞ்ச இத்தனை கொலையிலும் எந்த ஒரு சின்ன ஆதாரமும் சிக்கவே இல்லை." என்று கமிஷ்னர் கூற
"கொலைக்காரனுக்கு சர்டிபிகெட் கொடுக்கிறிங்க சார்" என்றார் இன்னொரு ரிப்போர்டர்.
"திறமை யாருக்கு இருந்தாலும் அதை பாராட்டுவதில் என்ன தவறு?" என்றார் கமிஷனர்.
"பார்த்தியாண்ணா இந்த போலீசை!" என்றாள் மதுஷாலினி கட்லட்டை பிய்த்து வாயில் வைத்துக்கொண்டு. நவீனும், அவளும் கம்பெனி கேன்டினில் இருந்து டீ குடித்துக்கொண்டு இருந்தார்கள் வேலை இடைவெளியில். நிதுல்தரேன் மதுஷாலினியை குற்றம் சாட்டிய பிறகும் நவீனுக்கு அவள் மீது நம்பிக்கை இருந்தது.
அன்று மாலை வெளியே போய்விட்டு வந்துக்கொண்டிருந்த நிதுல்தரேன் பார்வைக்குள் விழுந்தாள் மதுஷாலினி அவளது இருக்கையில் இருந்தப்படி. அவளின் இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு பென்சிலை உதட்டில் தட்டிக்கொண்டு, ஒரு கையால் டேபிளில் சத்தம் வராமல் தாளம் போட்டுக்கொண்டு அவள் இருந்த தோரணையை பார்த்தவனுக்கு உள்ளே அவள் மேல் இருந்த சந்தேகம் வலுக்க தொடங்கியது. அவள் இவனை கவனிக்கவில்லை. உள்ளே சென்றுவிட்டான். சென்று அவளை போகஸ் செய்யும் கேமிராவை அவன் பார்த்தான். இதே நிலையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவள் ஒரு பேப்பரில் எதையோ கிறுக்க தொடங்கினாள்.
YOU ARE READING
கொஞ்சும் கவிதை நீயடி
Romanceஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை...