அத்தியாயம் 15

1.7K 120 14
                                    

"என்ன கிளம்புறியா? டிரைவரை வர சொல்லவா?" என்று கேட்டுக்கொண்டு தன் முன்னே நிற்கும் நிதுல்தரேனை பார்க்கும் போது மதுஷாலினிக்கு பத்திக்கொண்டு வந்தது.  ஆனால் அதை வெளியே காட்டாமல் 

"நான் பாவம் பேபி. ரொம்ப டயர்டா வந்திருக்கேன்." என்று இவள் கூற 

"வேணுமுன்னா நவீனை வர சொல்றேன்.  அவன் கூட வெளியே போ.  நல்லா சுத்திப்பாரு, நல்லா இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு வாங்க.  செலவுவை வேணா நான் ஏத்துக்குறேன்.  ஏதோ ஆறு மாசமா என் கம்பெனியில் வேலை செய்தன்னு என்னால இதைத்தான் செய்ய முடியும்.  நீ வேலை செய்ததுக்காக மட்டுமில்லை ஒரு கிரேட் ஜெர்னலிஸ்ட்.  அந்த மரியாதைக்குத்தான் இப்படி பொறுமையா பேசிட்டு இருக்கேன்." என்றான் அவன்.  

"பயமா இருக்கு பேபி, நைட் எல்லாம் அதுவே கண்ணுக்குள்ள வந்து நிக்குது.  இதுவரைக்கும் இப்படியெல்லாம் நான் பார்த்தது இல்லை, இந்த அளவுக்கு பயந்ததும் இல்லை.  அதை எப்படி ஒரு மனுசனால செய்ய முடியும்? மிருகமா மாறிட்டு இருக்கா என்ன மனித இனம்!" என்று இவள் தானாக அவள் மனதில் இருப்பதை சொல்ல தொடங்கினாள்.  அவளை ஆழமாக பார்த்தவன் ஒரு சேரை இழுத்துப்போட்டு அவள் முன்னே இருந்தான். இருந்தவன் தயங்கி அவளின் உள்ளங்கையை பிடித்து தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டான்.  

"என்னாச்சு?" என்று மென்மையாக அவன் கேட்க தன் உள்ளங்கையை பொத்தி வைத்திருக்கும் அவன் உள்ளங்கையை அழுத்தமாக பிடித்தவள் 

"நீ ஒரு ஆம்பிளைதானே! எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்க.  அன்னைக்கு என்னை இப்படி கைக்குள்ள வச்சு தூக்கிட்டு போனியே! ஆனாலும் உன் கை எவ்வளவு சாப்டா இருக்கு! இப்படித்தானே எல்லா ஆண்களுக்கும் இருக்குமா இருக்கும்.  அப்புறம் எப்படி அந்த கையாள ஒரு உயிரை துடிக்க துடிக்க துண்டு துண்டா வெட்டி வீச முடிஞ்சிச்சு.  அந்த பிரசாந்த்தை போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா? அவனை கொன்னு இப்படி பீஸ் பீஸா வெட்டல.  உயிரோட வச்சே ஒவ்வொரு பாகமா வெட்டி எடுத்திருக்கான்னு சொன்னாரு.  எப்படி முடியும் பேபி அப்படி.  அப்படி என்ன வெறி ஒரு மனுஷனுக்கு.  அப்படி செய்தவன் எப்படி ஒரு மனுசனா இருக்க முடியும்?" என்று ஆத்தாமையுடன் இவள் கேட்கும் போதே அவளை அறியாமல் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துக்கொண்டு இருந்தது.  

கொஞ்சும் கவிதை நீயடிWhere stories live. Discover now