Just Jolly - சென்னைத் தமிழ்

53 7 1
                                    

ஐயய்யோ சென்னைத் தமிழ்,
அதைக் கேட்டால் உமிழ்;
என்று சொல்வது அங்கே யாரு,
ஒன்று சொல்வேன் இங்கு பாரு;

கேப்மாரி பேமானி சோமாரி,
என்று ஏதேதோ உண்டீங்கு வசை மாரி;
கெத்த உடாத தூக்கு மச்சி,
என்று தோள்கொடுக்கும் இளசுகள் கூட்டம் மெச்சி;

இன்னாதுக்கு? ...... இன்னா செய்வதற்கா?
என்று கேட்பதிலும் நன்னய குணம்;
வா ராசா குந்து ......
என்று ஒருமையிலும் தாயின் மணம்;

வார்த்தையில் இலக்கணம் அவசியம் வேண்டும்,
ஆனால்.... வாழ்க்கையின் இலக்கணம் நாம் இங்கு கண்டோம்;
வந்தாரை வாழ வைக்கும் சென்னை இது என்றார்,
இல்லை...... இகழ்ந்தாரையும் வாழ வைக்கும் சென்னை இது அன்றோ!

வாழ வந்த பின் நீ சென்னை வாசி,
வாழ வைக்கும் அதை நீ உண்மையில் நேசி.....

பி.கு.  சென்னையை நேசிப்பவர் தவறாமல் வோட் செய்யவும்.

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Where stories live. Discover now