மலையிலிருந்து வீழும் அருவி மகளே,
வைரங்களாய் மிளிருது உந்தன் துகளே;வெள்ளிக் கம்பிகளை உருக்கியது போல் ஜொலிக்கின்றாய்,
துள்ளிக் குதிக்கும் இளைஞர்க்கு இன்பத்தை அளிக்கின்றாய்;குற்றாலம் ஓகனெக்கல் கும்பகரை திற்பரப்பு,
சென்றாலும் ஓயவில்லை இன்றுவரை உன்ஈர்ப்பு;உன் மடியில் பிறக்குதம்மா வற்றா ஆறு,
அதுதானே வழங்குதம்மா எமக்குச் சோறு;
உன் அழகில் மயங்காதோர் யார் இங்கு வேறு!
ESTÁS LEYENDO
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoesíaTamil poems # 46 in poetry on Oct 22nd