தமிழ்

45 5 1
                                        

தமிழன்னையே,

மூழ்கி முத்தெடுப்போர்க்கு  நீ முத்தமிழ்,
ஆழ்ந்து தேன் சுவைப்போர்க்கு நீ பைந்தமிழ்;

இன்றலர்ந்த கவிஞர்க்கு நீ கன்னித்தமிழ்,
பார்போற்றும் புலவர்க்கு நீ அன்னைத்தமிழ்;

வள்ளுவனுக்கும் பாரதிக்கும் மட்டுமா நீ அன்னை?
தாலாட்டி, சீராட்டி பேணுகிறாய் என்னை;

எனவே,

சொல் மலர் கொண்டு வணங்கினேன் அம்மா உன்னை!
உயிர் மூச்சு உள்ள வரை மறவேன் அம்மா தமிழ் கண்ணை!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Tempat cerita menjadi hidup. Temukan sekarang