கூறுங்கள் யாரு?

48 4 4
                                    


நிமிர்ந்து நேர்கொண்டு நிற்கும் கலையரசி,
என் கண்களுக்கோ நீ பாரதியின் புதுமைப் பெண்ணரசி;

உன் மடியில் பிறக்குதம்மா வற்றா ஆறு,
அது தானே வழங்குதம்மா எமக்குச் சோறு;

கல்லுடைக்கும் மக்கட்கு உந்தன் பொறுமை,
தாய்மைக்குச் சான்றாகும் நிந்தன் கருணை;

உன் அழகில் மயங்காதோர் யார் இங்கு வேறு,
உன் பெயர் தெரியாதோர் யார் இங்கு கூறு!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Où les histoires vivent. Découvrez maintenant