பொன் மாலை பொழுது

172 4 3
                                    


ஆடிக் காற்றில்,
மாடிச் சுவற்றில்,
அமர்ந்திருந்தேன் நான்;

மாலைப் பொழுதாய்,
ஜ்வாலைப் பிழம்பாய்,
மிளிர்ந்திருந்தது வான்;

மூங்கில் குழலாய்,
ஓலை நரம்பாய்,
மீட்டியிருந்தது நாண்;

கூவும் குயிலும்,
தாவும் அணிலும்,
என்னோடிருந்தன தான்;

அஃறினை பொருளாய்,
உயர்தினை உயிராய்,
மெய்மறந்திருந்தேன் யான்;

ஆடிக் காரில்,
கூடிச் சேரினும்,
இச்சுகம் வருமோ காண்!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Donde viven las historias. Descúbrelo ahora