எனக்கொரு நண்பன் வேண்டும்,
ஏங்குகிறேன் மீண்டும் மீண்டும்;
என் பாரங்களைச் சுமக்க அல்ல,
என் தூரங்களை வழி நடத்திச் செல்ல;
என் சோகங்களை பகிர அல்ல,
என் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள;
எனக்காகத் தன்னை லேசில் மாற்றாதவன்,
ஒருபோதும் என்னை தராசில் ஏற்றாதவன்;
என் மனதோடு ஒத்துச் செல்பவன்,
தன் அறிவால் என்னை வெல்பவன்;
அகமொன்று, புறமொன்றாய் நடிக்காதவன்,
என் அகத்தின் ஆழத்தை படிக்கத் தெரிந்தவன்;
எங்கே ஒளிந்தாய் எனதுயிர் நண்பா,
இங்கே அழைத்தேன் சீக்கிரம் ஓடிவா!
STAI LEGGENDO
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoesiaTamil poems # 46 in poetry on Oct 22nd
