1. யாருக்கு யார் சொந்தம்

4.5K 118 23
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 1*

சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த வீட்டில்...

சாருமதி தன் 4வயது செல்ல மகளுக்கு சீருடையை அணிவித்து பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். மழலை மொழியில் மகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டே காலை உணவையும் கையோடு ஊட்டிவிட்டு தானும் இரண்டு கவளத்தை வாயில் போட்டுக் கொண்டாள்.

சின்ன மகளை பாதுகாப்பாய் தன் பின்புறமாய் ஸ்கூட்டியில் அமரவைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினாள்.

சாருமதி அழகும் அறிவுமான பெண். தன் சின்ன மகளுடன் சென்னைக்கு வந்து 3வருடம் ஆகிறது. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை.  மகளை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அன்று அவர்களின் அலுவலகத்தை வேறு ஒரு நிறைவனத்தார்  பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதால் எல்லாரையும் சற்று முன்னதாக வரச் சொல்லிருந்தார் தற்போதைய உரிமையாளர் தாமோதரன். அவளது தந்தையின் வயதில் இருப்பவர். அவளைப் பற்றி எல்லாம் அறிந்தவரும்கூட. சொல்லப் போனால் இந்த வேலையில் அமர்த்தி, அவள் கௌரவமாக வாழ வழி செய்தவரே அவர்தான்.

இப்போது வரப்போவது யாரோ? எப்படியோ? என்று உள்ளூர ஒரே உதைப்புதான். ஆனாலும் வருபவர் நல்ல மாதிரிதான் என்றும்  அவளது வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தைரியம் சொல்லியிருக்கிறார் தாமோதரன்.

தாமோதரனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஹார்ட் அட்டாக் வந்ததால் வெளிநாட்டில் இருக்கும் ஒரே மகன் இனி தனியாய் இருக்க வேண்டாம் என்று கம்பெனியை தன் நண்பனுக்கு தந்துவிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். அவரது உடல்நிலையின் காரணத்தால் பெரியவரால் மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த இயலும் என்று தோன்றவில்லை. அத்தோடு மகனை மீறமுடியவில்லை. சாருவிற்குதான் கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. ஏதோ பாதுகாப்பை இழப்பதைப் போலிருந்தது.

வாழ்வில் எல்லாமும் எதிர்கொள்ளத்தானே வேணும்??
வருவது யார்??

தொடரும்...

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Where stories live. Discover now