*யாருக்கு யார் சொந்தம் - 6*
முன் இரவில் பல விடை தெரியா கேள்விகளோடு போராடிவிட்டு விடியும் தருவாயில் கண்ணயர்ந்தவளை 5:30 மணி அலாரம் சிணுங்கி எழுப்பியது. கண்களை பிரிக்கக்கூட பிரியமில்லை சாருவிற்கு. உடலும் மனமும் சோர்ந்து கெஞ்சியது. ஆனால் மற்ற நாளாக இருந்தால் பரவாயில்லை. தாமோதரனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று படுத்துவிடுவாள். இப்போது அது முடியாதே, சலுகை அதுவும் அவனிடம் போய் கேட்பதா? என்னவென்று கேட்பது? ஆசையாய் பேசி மோசம் செய்தவனிடம் வேலை செய்வதே கேவலம். நினைத்தாலே உடம்பெல்லாம் எரிகிறது. கௌரவமாய் வாழ வேண்டியவளை இப்படி ஒரு நிலையில் நிறுத்திவிட்டானே? ஆனால் அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் எத்தனை கம்பீரமாய் வந்து நிற்கிறான்?? கூடவே அந்த ஊனம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஒருபுறம் தவித்த மனதை அடக்க முடியவில்லை. இத்தனைக்கு பிறகுமா அவனிடம் இரக்கம் உனக்கு என்று மனது இடித்தது.
மனம் ஏதேதோ எண்ணினாலும் கைகள் வேலைகளை செய்தபடி இருக்க "அம்மா" என்ற மகளின் வீறிடலில் நிகழ்விற்கு வந்த சாரு அவளிடம் விரைந்தாள்.
"என்னடா குட்டிமா, என்னாச்சு என் பட்டுக்குட்டிக்கு ? என்றவாறு மகளை அள்ளி மார்போடு அணைத்து வருட அழுகை மெல்ல நின்று.. "அம்மா என் பொம்மையை அந்த நவீன் பிடுங்க வந்தான்"
என்றாள் கேவலுடன்.“சே, சே அவன் குட் பாய் இல்லையா செல்லம். அவன் அப்படிலாம் பண்ண மாட்டான்மா. அம்மா அவன்கிட்ட சொல்லிடுறேன் சரிதானா? இப்ப சமத்தா போய் பிரஷ் பண்ணிட்டு வந்து பால் குடிப்பியாம், அம்மா அதுக்குள்ள உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சிடுவேனாம். உம்ம்மா"என்று நெற்றியில் உச்சிமுகர்ந்து மகளை பாத்ரூமில் விட்டு பிரஷில் பேஸ்ட்டை வைத்து தந்தாள்.
பதிலுக்கு கன்னத்தில முத்தமிட்டு "ஹைய்யா பூரி என்று பிரஷ்ஷை பெற்றுக் கொண்ட மகளை ஒரு கணம் பார்த்திருந்துவிட்டு சமையலை கவனிக்கப் போனாள் சாரு!
******************
எவ்வளவு முயன்றும் சித்ரஞ்சனால் அந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை. எல்லாருக்கும் முன்னதாக அலுவலகம் வந்து அவளது விவரங்கள் அடங்கிய கோப்பை கணினியில் பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமதி. சாருமதி என்று இருந்தது.
VOCÊ ESTÁ LENDO
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது
Ficção Geralஇது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...