7. யாருக்கு யார் சொந்தம்

2.3K 86 7
                                    

அன்று இரவு. ..சித்ரஞ்சனுக்கு தூக்கம் பறிபோயிற்று. மஞ்சரியை பார்த்தது முதல் மனது ஒரு நிலையில் இல்லை. அழகாய் இருந்த அந்தக் குழந்தை மனதிலேயே நின்றாள். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அதுவும் சாருவுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததில் அவனுக்கு பெரும் அதிர்ச்சிதான்.

அவனுடைய லதா அப்படி எளிதில் மனம் மாறக் கூடியவளா? அவனால் நம்பமுடியவில்லை. என்றாலும் அது மறுக்க முடியாத உண்மை என்று உயிருள்ள சாட்சியாய் குழந்தை இருக்கிறதே ? அவனால் அதைத்தான்  ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் மீது கோபமும் வரவில்லை. மாறாக பரிதாபம்தான் உண்டாயிற்று.

அவன் தகவல் சேகரித்தவரையில் கணவர் என்ற நபர் இதுவரை அங்கே வந்த அறிகுறி இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவள் கணவர் வெளிநாட்டில் ஏதோ குறைந்த சம்பளத்தில் வேலையில் இருப்பதாகவும் அடிக்கடி வந்து போக முடியாத நிலையில் இருப்பதாகவும்  தகவல். ஆனால் சித்ரஞ்சனுக்கு அதில் கொஞ்சம் சந்தேகம் தான் அவளைப் பற்றி தகவல் சேர்த்தவர்கள் தந்த அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் இருந்தது.

அவளது நடவடிக்கையை தெரிய படுத்த ஆள் போட்டிருந்தான். அதனாலேயே அவளை தொடர்ந்து மாமல்லபுரம் வரை செல்ல முடிந்தது. தவறான எண்ணத்தில் அதை அவன் செய்யவில்லை. அவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாளா இல்லையா என்ற ஐயம் அவனுக்கு. அதை தெளிவு படுத்திக் கொள்ள நினைத்தான். கண்ணால் ஒரு முறை  கண்டுவிட்டால், பிறகு அவளை தொந்தரவு செய்யாமல் விலகிப் போக முடிவும் செய்திருந்தான்.

ஆனால் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவள் சந்தோஷமாக இல்லை என்பதைவிட அவளுக்கு யாருமே இல்லை என்ற முடிவிற்குதான் வரமுடிந்தது. மாமல்லபுரத்தில் இருந்த அவ்வளவு நேரமும் கிட்டத்தட்ட பலமணி நேரங்களில் ஒருவர்கூட அவளை கைப்பேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் யாருக்கும் பேசவில்லை. அதுவும் இன்றைய தொலைத் தொடர்பு சாதனங்களில் உள்ள வளர்ச்சியில் எல்லாருமே போனும் கையுமாகத்தானே இருக்கிறார்கள். அவள் பேருக்குக்கூட கைபேசியை எடுக்கவில்லை. மாறாக மகளிடம் தான் கேம் விளையாடத் தந்தாள். இதுதான் அவனது சந்தேக்தை வலுப் படுத்தியது.

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ