12. யாருக்கு யார் சொந்தம்

2.1K 80 15
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 12*

சாருவிடம் விளக்கம் கேட்க எண்ணி சித்ரஞ்சன் தனியறைக்கு அழைத்துப் பேசினான். அவளோ அவனை குற்றம் சாட்டினாள். அதை அவன் மறுக்க ஆதாரம் கேட்டாள் சாரு, எப்படி அவளை நம்பச் செய்வது என்று யோசனையுடன் அறையின் குறுக்கே நடந்தவன் ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கண்டதும் அவளை அழைத்துக் காட்டினான்.

ஆனால்...
அவனருகே தன்னை சேர்த்து பார்த்த சாரு, வார்த்தை வராமல் தடுமாற, சித்ரஞ்சனுக்கும் சுற்றுப்புறம் மறந்து இருவர் மட்டும்மே கருத்தில் பதிய பேச்சற்று நின்றான். சுவர்க்
கடிகாரம் ஓசை எழுப்ப தன்னிலை உணர்ந்த சாரு, "இங்கே எதை காட்ட அழைத்தீர்கள் ?" என்றாள் கரகரத்த குரலை செருமி சரிசெய்தபடி.

அவனுக்கும் கூட குரல் தகராறு செய்ய, "என்னைப் போல என் தம்பியும் இருப்பான் என்பதை இப்போது கண்ணாடி பார்த்ததும் தான் நினைவிற்கு வந்தது லதா! நாங்கள் ரெட்டையர்கள் அல்ல என்னை விட ஒரு வயது சின்னவன். ஆனால் இரட்டையர்களாத் தான் தெரிவோம். வீட்டில் அம்மாவே குழம்பிவிடுவார்கள். குழப்புவதில் தம்பி ரொம்ப கைதேர்ந்தவன்" ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு உணர்ச்சியற்ற குரலில் உரைத்தான்

சாருவிற்கு நம்ப கடினமாக இருந்தது. அவள் அவனிடம் சொல்லியிருந்தது போல அவன் சகோதரன் பற்றி சொல்லியிருக்கவில்லை. தான் தப்பிக்க பொய் சொல்கிறானோ என்று உறுத்தலாக இருந்தது. அவனிடம் கேட்க தயங்கினாள். தேவையின்றி சந்தேகப்
படுகிறோமோ என்றும் நினைத்தாள். இவ்வளவிற்கு கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்ட வாழ்கையை விட்டுவிடவும் அவள் தயாரில்லை. அதே சமயம்,உண்மை அறியாமலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது.

அவளது மனதை ஊகித்தவனாய், "புரிகிறது லதா எனக்கொரு தம்பி இருக்கிறான் என்று என்னால் எப்போதுமே பெருமையாக வெளியே சொல்லிக் கொள்ளும்படியாக அவன் நடந்து கொண்டதில்லை. அதிலும் என் பெயரை சொல்லி என்னை மாட்டிவிட்டு அவன் தப்பித்துக் கொள்வது அவனுக்கு வழக்கம்."
"அதனாலேயே நான் அவனிடமிருந்து விலகி இருந்தேன். எனக்கு அப்பா அம்மாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற ஆசை. அதை செயல்படுத்தவும் செய்தேன். அவனை விட்டு ஒரேடியாய் விலகும் முயற்சியில் தான் நான் பெங்களூர் வந்தேன். எல்லாமும் கூடிவந்து நான் அது சம்பந்தமா வெளி நாடு சென்றேன் ஆனால் விதி சதி செய்துவிட்டது" என்று ஒரு பெருமூச்சுடன் சித்ரஞ்சன் நிறுத்தினான்.

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ