8. யாருக்கு யார் சொந்தம்

2.1K 75 11
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 8*

அன்றைக்கு ஒருவாறு மகளை சமாதானம் செய்து தூங்க வைத்த சாருவிற்கு தூக்கம் தொலைந்து போயிற்று. இழப்பும் அப்போது பட்ட வலியையும் எண்ணி இப்போது அழுகையில் கரைந்தாள் சாரு! பெண்களுக்கான  வடிகால் அதுதானே!!

மறுநாள்...ஞாயிறு
இரவெல்லாம் அழுததில் காலையில் தலையை வலித்தது. அன்றைக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருந்தது. அலுவல் பணி காரணமாய் வாரம் முழுதும் தாமதமாய் வீடு வர நேர்ந்ததால் அன்றாடப் பணிகள் தேங்கிவிட்டுருந்து. இன்றைக்கு அதனால் வேலை பளுவும் அதிகம். அதன் காரணமும் நினைவிற்கு வர பல்லைக் கடித்தாள் சாரு, ராஸ்கல் எல்லாம் அவனால் வந்தது. மகளின் விருப்பத்தை அவளால் நிறைவேற்ற முடியாது. அவனிடம் போய் நிற்க அவளுக்கு இஷ்டமில்லை என்பது மட்டுமில்லை. மஞ்சரியை  வாரிசு என்று உரிமை கொண்டாடுவானோ என்று உள்ளூர ஒரு பயம் இப்போது உண்டாகி இருந்தது. அது அர்த்தமற்றதுதான்.

ஆனாலும்…
இத்தனை நாட்கள் அவளைப் பார்த்தும் பழைய விஷயம் பற்றி பேச முன்வராதவன், குழந்தையை பார்த்தபின் அதனோடு பழக வந்திருக்கிறானே? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தன் ரத்தம் என்ற துடிப்புதானே??அப்படி என்றால்  மறைமுகமாய் தன் தவறை ஒத்துக் கொள்கிறான் என்றுதானே அர்த்தம்? அதை எண்ணும் போதே உடம்பெல்லாம் தகித்தது. அப்படி அவன் மஞ்சரியை உரிமை கொண்டாடி வந்தால் அவளால் அதை எப்படி ஏற்க  முடியும்? ஆடு பகை குட்டி உறவா? மனம் பலவாறு சிந்தனையில் உழல கைகள் வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்தது.

மஞ்சரி இன்னும் எழவில்லை. இத்தனை நேரம் தூங்கும் வழக்கம் இல்லையே ? மனதில் ஏதோ உறுத்த குழந்தையிடம் சென்றாள் சாரு, போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த குழந்தை லேசாய் அனத்திக் கொண்டிருக்க.. நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், அனலாய் கொதித்தது. பதறிப்போனவளாய்,
"கண்ணும்மா என்னடா பண்ணுது" என்று குழந்தையை வாரி மடிமீது போட்டுக்கொண்டாள்.
"ம்ம்ம்... அம்மா அம்மா.."
"சொல்லுடாமா, குளிருதாடா?"
ம்.... அம்மா ...மா அந்த அங்கிள்கிட்ட போகணு.... திக்கி திணறி குழந்தை சொல்ல அதிர்ந்து போனாள் சாரு!

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Where stories live. Discover now