*யாருக்கு யார் சொந்தம் - 11*
சாரு, ஒருபுறம் தன் வேதனையில் கிடக்க,சித்ரஞ்சன் ஒருபுறம் வேதனையும் தவிப்புமாய் யோசனையில் இருந்தான். முந்தைய தினம் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் தெளிவாகிவிட்டிருந்தது. சாரு, அவனை மறக்கவில்லை. மருத்துவமனையில் அது அவனுக்கு தெளிவு. பெயர் மாற்றத்திற்கும் காரணம்கூட இருக்கலாம். அவளே சொல்லும் சமயம் வந்துவிட்டது. இன்னமும் ஒரு விஷயம் அங்குதான் அவனுக்கு உறுதி தேவைப்பட்டது. அது மட்டும் தெரிந்து விட்டால் அவனுக்கு பூரண நிம்மதி கிடைத்துவிடும். அதையும் அவள்தான் தெளிவு படுத்த வேண்டும். ஆனால் இத்தனை ஆத்திரம் கொள்ள என்ன காரணம்?
குழந்தை மஞ்சரி தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சிக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள்,
அவளுக்கும் தான் அப்பா யார் என்று சொல்லப்படவில்லை. அவன் யோசித்தபடியே குழந்தையை பார்த்திருக்க பணிப் பெண் வந்து காலை உணவிற்கு அழைத்தாள்.சாருவிற்கு அவளது சாப்பாட்டை அறைக்கே கொண்டுபோய் கொடுக்கச் சொல்லிவிட்டு மஞ்சரியுடன் சாப்பாட்டு அறைக்கு சென்றான் சித்ரஞ்சன். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் சாப்பிட அழைத்தால் வரமாட்டாள், முன்தினமும் சரியாய் சாப்பிட்டிருக்கமாட்டாள் என்று அவனுக்கு தோன்றியது.
சாருவிற்கும் நல்ல பசிதான். ஆனால் அவனை சந்திப்பதை அவள் விரும்பவில்லை. வேலைக்காரிக்கு நன்றி சொன்ன போது அவள் விஷயத்தை சொன்னாள்! அவனுக்கு அவளிடம் அக்கறை இருப்பது மருத்துவமனையில் அவள் உணர்ந்திருந்தாலும் இதை எதிர்பார்க்கவில்லை.
குழந்தை மஞ்சரி சித்ரஞ்சனிடம் சமத்தாய் சாப்பிட்டாள். அம்மாவைத் தேடியவளிடம் "அம்மாவிற்கு கொஞ்சம் ஜுரம் அதனால் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்லி மகிளாவுடன் காரில் வெளியே சுற்றி பார்க்க அனுப்பிவிட்டு சித்ரஞ்சன் சாருவை அழைத்து வருமாறு அடுத்த பணியாளிடம் பணித்தான்.
யாருக்கும் அவர்கள் பேச்சு கேட்காத வகையில் கீழே இருந்த கோடி அறையில் காத்திருந்தான். அவள் வரமாட்டாள் என்றே எண்ணியிருந்தான். ஆனால் அவளுக்கும் தான் பேசிவிட்டால் கொஞ்சமேனும் பாரம் தீரும் என்று இருந்ததால் உடனேயே வந்து விட்டாள்!

KAMU SEDANG MEMBACA
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது
Fiksi Umumஇது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...