16. யாருக்கு யார் சொந்தம்

3.2K 75 24
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 16*

ப்ரிய ரஞ்சன் வருவது குறைந்ததால் சாருமதி உள்ளூர உடைந்து போயிருந்தாள். அதை பகிரவும் ஆள் இல்லாது தவித்துக் கொண்டிருந்தாள். மூன்றாம் மாதம் சாருமதிக்கு உடலில் மாற்றங்கள் உண்டாக, சாருலதா வற்புறுத்தி மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.

மருத்துவர் அவளை பரிசோதித்துவிட்டு விஷயத்தை சொல்லவும் அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள். மயக்கம் தெளிந்த போதோ சாருமதி சுயநினைவை இழந்து பிரம்மை பிடித்தாற் போல் இருந்தாள். மருத்துவர்கள் அவளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூற சாருலதா செய்வதறியாது திகைத்தாள். திருமணமின்றி பிள்ளை உண்டானதற்காக கவலைப்படுவதா? பைத்தியமானதற்காக கவலைப்படுவதா? ஆனால் அழுவதற்கும்கூட அவளுக்கு அவகாசம் இல்லையே?

ஏற்கனவே சித்தரஞ்சன் சென்றபிறகு முதல் இரண்டு  தினங்கள் தான் அவளிடம் பேசினான். வெளிநாடு சென்றபின் அவளை அழைத்து பேசுவதாக தெரிவித்ததவடு சரி. மற்றபடி அவன் பேசவில்லை. இவள் தொடர்பு கொண்டாலும் உபயோகத்தில் இல்லை என்று தகவல்தான் வந்தது. அதனால் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்திருந்தாள்.

தன்னிலேயே இருந்த காரணமாக தங்கையை ஊன்றி கவனிக்காது விட்டுவிட்டாள். அதற்காகத்தான் இந்தச் சோதனை போலும்?? ஒரு பெருமூச்சுடன் அடுத்து செய்ய வேண்டியதை நினைத்துப்
பார்த்தவளுக்கு விரைந்து செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமாக முதலாவதாய் இருந்த பிரச்சனை குழந்தைதான். இந்தக் குழந்தையை எப்படி வளர விடுவது? தங்கையிடம் அவன் யார் எவரென்று கூட அறியமுடியாத சூழலில் குழந்தை வளர்ந்தால் சமூதாயம் கேலி செய்யும், குற்றவாளியாய் பார்க்கும். குற்றம் செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் விசித்திர சமூகத்தில் அல்லவா வாழ்கிறோம்? வெகுவாக யோசித்து கடைசியில் குழந்தையை கலைத்துவிட முடிவு செய்தாள்,சாருலதா.

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Donde viven las historias. Descúbrelo ahora