10. யாருக்கு யார் சொந்தம்

2.1K 79 10
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 10*

சித்ரஞ்சன்  நிழல் போல் ஒருவனை நியமித்திருப்பதை அறியாத சாரு மகளை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு பயணமானாள். மஞ்சரி கிளம்பமாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவளை ஒருவாறு சாமாதானம் செய்து உடன் அழைத்துப் போனாள்.

ஆனால் ....
மறுநாள் காலை அவள் பெங்களூரை அடையுமுன்பாக சித்ரஞ்சன் அங்கே இருந்தான். அதுவும் அவள், வந்து இறங்கிய வண்டியின் அருகிலேயே காருடன் காத்திருந்தான்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய சாரு, அவனைப் பார்த்ததும் அப்படியே திகைத்து நிற்க.. மஞ்சரியோ, குதூகலத்துடன் "ஹைய்ய்ய்,அங்கிள்.... என்று தாவி குதித்து ஓடிச் சென்றாள்!

அவனும் வாரி எடுத்து அணைத்து ஒரு பூச் செண்டைப் போல தூக்கிக் கொண்டான். அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு  சித்ரஞ்சனும் முத்தமிட்டான்.
"அங்கிள் உங்களுக்கு மேஜிக் தெரியுமா?" என்றாள் கண்கள் விரிய ,

"ம்ம்..கொஞ்சூண்டு தெரியும்டா  ஏஞ்சல், ஆமா இப்போ என்னாச்சு?" முன்புறம் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டவாறு வினவினான்.

"நாங்க வர்றது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு அங்கிள்?" தன் இரு பிஞ்சுக்  கைகளால் அவனது முகத்தை தாங்கிக் கொண்டு கேட்க வாய்விட்டு சிரித்தான்.
“அதுதான் நீயே சொல்லிட்டியே செல்லம் மேஜிக்லதான் தெரிஞ்சது”என்றுவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு
"காரின் முன்புறம் அமர வைத்துவிட்டு காரோட்டியிடம் சைகை செய்ய அவன் சாருவின் பெட்டியை எடுத்துக் கொண்டு போக,

வேரோடியவளாய் வெறித்த பார்வையுடன் நின்றவளிடம் சென்று "இங்கேயே  எல்லாருக்கும் இலவச காட்சிப் பொருளாக நிற்பதாக வேண்டுதலா ?" என்றான் குரலில் ஏளனம் தொனிக்க..

சாரு, சிலைக்கு உயிர் வந்தது. கண்களில் கனல் தெறித்தது. "என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீர்களா?" என்றாள் ஆத்திரத்தை அடக்கிய  குரலில்.

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Donde viven las historias. Descúbrelo ahora