14. யாருக்கு யார் சொந்தம்

1.9K 78 11
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 14*

சாருமதி ப்ரியரஞ்சனை அடுத்து பார்த்தது ஒரு ஓவியக் கண்காட்சியில். அநேகமாய் அவள் போகும் இடங்களில் தன்னை காட்டிக் கொண்டான். சில சமயம் அவளை கண்டும் காணாதவனாய் நடந்து கொண்டான். அவனைப் பார்த்தாலே அவள் முகம் பளிச்சென்று மலர்ந்த விதம் அவனுக்கு அடுத்த கட்டம் செல்ல உதவியது. நாலு நாட்கள் அவள் கண்ணிலேயே படவில்லை. ஆனால் அவள் இவன் கண்காணிப்பில் தான் இருந்தாள்!
அடுத்த நாள் கல்லூரியின் முன்னால் இருந்த காபி ஷாப்பில் அவள் வரும் நேரம் காத்திருந்தான் ப்ரியரஞ்சன். சாரு அவனை அங்கே பார்த்ததும் ஓடோடி வந்தாள்,

"ஐயோ நீங்கள் தானா சார்? என்றாள், கண்ணும் முகமும் பளபளக்க.

" ஏன் பேபி என்னை எதற்காவது தேடினாயா? என்றவன்  முதலில் நீ உட்கார் பேபி, என்று அவளை அமரச் சொல்லவும் அவன் எதிரே அமர்ந்தாள்.

"அது.. அது  இல்லை சார் , உங்கள் பெயர் கூட கேட்காமல் விட்டுடேன் . அதுதான் அடுத்த முறை உங்களப் பார்ப்பேனோ மாட்டேனோ என்று நினைத்தேன். பார்த்தால் ஞாபகமா பெயரை கேட்டுடனும்னு நினைச்சிட்டே வந்தேனா, நீங்களே இங்கேயே இருக்கிறீர்கள அதுதான் ஆச்சர்யம் ஆகிட்டது சார்"

"ம்,ம்.. நான் கூட ஒரு நிமிஷம் ரொம்ப சந்தோசப்பட்டுட்டேன் பேபி" என்றான் முகத்தை சோகமாய் வைத்தபடி.
"எ..என்ன .. சார்? என்றாள், குழப்பத்துடன்.
"நாமதான் இந்தப் பொண்ணையே நினைச்சிட்டு இருக்கோம்னு நினைச்சா, நம்மள இந்தப் பொண்ணும்  நினைச்சிருக்காளேன்னு ஒரு செகண்ட் சந்தோசப்பட்டேன்.... ம்ஹூம்.... நீயானால் இல்லைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டே பேபி" என்று ஏற்ற இறக்கத்துடன் சொல்ல...

சாருவிற்கு மனம் படபடத்தது.முகம் லேசாய் சிவக்க... "நிஜமாவா சார்?  என்றாள் தடுமாற்றத்துடன்.

"பின்னே நான் என்ன பொய்யா சொல்றேன்? உன்னைப் பார்க்கத்தானே சென்னையில் இருந்து ஓடிவந்திருக்கேன். அதுவும் எதுக்காக இந்த ஷாப்பிற்கு வந்தேன் என்று நினைக்கிறாய்?? உனக்காகத்தான் பேபி"

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Where stories live. Discover now