4. யாருக்கு யார் சொந்தம்

2.7K 84 12
                                    


பெங்களூர்...

சித்ரஞ்சன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காரில் திருமணத்திற்கு கிளம்பியிருந்தான். செல்லும் வழியில் ஏதோ ஊர்வலம் குறுக்கிட்டது. அப்போது தான் சில கல்லூரிப் பெண்கள் லிப்ட் கேட்டனர். "பரிட்சைக்கு நேரமாகிறது சார் கொஞ்சம் எங்களை ட்ராப் பண்ணிவிடுங்கள் என்று" அவனால் எப்படி உதவ முடியும் ஊர்வலம் நகர்ந்தால் அல்லவா சாத்தியம்.? அதை சொல்லவும் செய்தான்.

அப்போதுதான் அவள் முன்னால் வந்து பேசினாள்,"சார், நாங்கள் வந்த ஆட்டோ ஏதோ காரணத்தினால் பழுதடைந்து விட்டது. நடந்து செல்லவும் முடியாது காலை நேரம் என்பதால் வேறு வாகனமும் கிடைக்கவில்லை. இந்தப் பக்கம் கிளைப்பாதை இருக்கிறது. ஊர்வலத்தை கடக்க அது ஒன்றுதான் வழி. எங்களுக்கும் அந்த வழியாக தான் செல்ல வேண்டும். கொஞ்சம் உதவி செய்யுங்கள் சார். இல்லாவிட்டால் பரீட்சைக்கு தாமதமாகிவிடும்" என்றாள்.

பெங்களூரு அவனுக்கு கொஞ்சம் பழக்கம்தான். ஆனால் இந்த இடம் சற்று புதிது. ஹோட்டலில் வழி எல்லாமும் சொல்லியிருந்தார்கள். இப்போது இவர்கள் சொல்லும் வழியில் அந்த திருமண மண்டபம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் தேர்வு மிக முக்கியமானது. உதவித்தான் ஆகவேண்டும், திருமணத்திற்கும் போயாக வேண்டும். சரி என்று அவர்களை ஏறச் சொன்னான். அவள் முன் புறம் அவனருகில் ஏறிக் கொள்ள மற்ற இருவரும் பின்னால் ஏறிக் கொண்டனர். போகும் வழியை அவள்தான் சொன்னாள். கூடவே அவன் எங்கே போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கும் எளிதாக வழி சொன்னதோடு நில்லாது, வரைபடமே போட்டுத் தந்துவிட்டாள்.

அவர்களை தேர்வு எழுதும் மையத்தில் இறக்கி விட்டுவிட்டு திருமண மண்டபத்திற்கும் முன்னதாகவே போய் சேர்ந்தான் சித்ரஞ்சன். காரிலிருந்து இறங்கும்
போதுதான் அவளது ஒரு புத்தகம் விட்டுப் போயிருந்ததைப் பார்த்தான். அதை திறந்து பார்த்த போது அதிலிருந்து ஒரு சீட்டு கீழே விழ, எடுத்துப்பார்த்தவன், அது ஹால் டிக்கட் என்று புரிந்தது.

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Donde viven las historias. Descúbrelo ahora