🌹💐குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகின்றேன்...மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக்கொண்டிருக்க
வெயிலடிக்க வேண்டுகின்றேன்...கூந்தல் வாசம் நுகர்ந்தபடி
உன்னோடு பொழுதை கழிக்க
தென்றல் வீச வேண்டுகின்றேன்...கடலில் கால் நனைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க வேண்டுகின்றேன்...கவிதை சொல்லியபடி
உன்னோடு காதலனாக நடக்க
பாதை நீள வேண்டுகின்றேன்...நனவுகளில் முடியாதென்றாலும்
கனவுகளிலாவது
உன்னைப் பிரியாமல் வாழ்ந்திட
வரமொன்று வேண்டுகின்றேன்..💐🌹Ãmmű....🌷