யாருமில்லா வீதியோரத்தில் உன்
கை விரல் பிடித்து நடக்க வேண்டும்.!அந்தி சாயும் நேரம் கடற்கரையில் உன்
தோல் சாய்ந்து நம் காதல் கதை பேச வேண்டும்.!உன்னோடு நீண்ட தூர பேருந்து பயணம் வேண்டும்..!
உன் நினைவுகளை தந்து செல்லும் இரவு நேர காற்று வேண்டும்..!
உன் குரல் கேட்டு என் பொழுதுகள் விடிய வேண்டும்.!
உன் முச்சிக் காற்றை கேட்டுக் கொண்டு
உறங்க வேண்டும்.!உன் திமிரையும் பிடிவாதத்தையும் என்னிடம் மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டும்.!
நீண்ட நாள் தவிப்பின் பின் உன் குரல் கேட்க வேண்டும்..!
உன் புன்னகைக்கு காரணம் நானாக வேண்டும்..!
உனக்காக கண்ணீர் சிந்த வேண்டும்.!
சோகத்தில் என் அரவணைப்பை நீ தேட வேண்டும்..!
எனக்காக ஓர் கவிதை எழுத வேண்டும்.!
உன்னோடு மட்டும் சண்டை அழுகை கோபம் வேண்டும்..!
ஒரு நொடி உனை பிரிந்தாலும் மறு நொடி சேரும் வரம் வேண்டும்.!
எப்போதும் உன் அருகாமை வேண்டும்..!
ஆயுள் முழுவதும் உன் அன்புக்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும்..!
மீண்டும் ஒரு ஜென்மம் உன் காதல் வேண்டும்...
Ămmű (s)....😍