Part 11

1.3K 54 4
                                    


ஐயோ இது என்ன இது நா நா என அழ தொடங்கிவிட்டாள் Uv, Uv உண்மைய சொல்லு இதுக்கு அர்த்தம் என்ன அன்னைக்கு கேட்டப்போ யாரையும் லவ் பண்ணலன்ட இப்ப இது இது என்ன என்று கோபத்தில் கேட்டான் ஷாம்., நடப்பது என்னவென்று அறியாமல் குழப்பத்தில் அழுது கொண்டிருந்தவளிடம் எந்தவித பதிலும் இல்லமல் இருக்க கோபத்தில் என்ன செய்வதென்று புரியாதவன் அறையைவிட்டு வெளியேறினான். வெளியே வந்ததை கண்ட Uv யின் தாய் தேவி என்ன தம்பி ஏதும் வேணுமா என கேட்க இவங்ககிட்ட ஏதும் இப்ப சொல்ல வேணா எல்லார்ட சந்தோஷமும் கெட்டுடும் என எண்ணியவன் இல்ல ஆண்டி சும்மாதான் போன் பேச வெளிய வந்தன் Uv dress மாத்துறா அதான் என்று சொல்லிவிட்டு தனிமையில் தோட்டத்தின் கல்லாலான ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். ஏதேதோ பல சிந்தனைகளில் இருந்தவன் இறுதியாக அறைக்கு வந்து பார்த்தான் Uv தரையிலேயே அழுதவாறு உறங்கிப் போனாள்.,

அடுத்த நாள் காலையில் எழுந்து பார்க்கும் போது ஷாமை காணவில்லை பயந்து போனவள் அறைக்கு வெளியே வந்து தேட தொடங்கினாள் ., Uv ஐ கண்ட தேவி என்னமா மாப்ள நேரத்தோட office கு கிழம்பிட்டரு டிபன் கூட சாப்ட இல்ல ., ஆஹ் அதுமா கல்யாணத்திற்கு 1week லீவு போட்டதானமா அதான் நெறய வேல office ல இருக்காம் அதான் கிளம்பிட்டாரு என சமாளித்தாள்., ஓஹ் அப்டியா சரி நீ குளிச்சிட்டு வந்து சாப்டு., ம் சரிமா என கூறிவிட்டு பத்ரூமினுள் நுழைந்து யோசிக்கலானாள்... என்னைய ஷாம் கோபிக்கிறாரு ஏன் குகன் இப்டி பண்ணான் இதுக்காகதான் கல்யாணத்துக்கு வர இல்லையா என பழய நினைவுகள் கண்ணுக்குள் வந்து சென்றது. ஷாம் வந்த பிறகு எல்லா உண்மையும் சொல்லிடுவோம் அதுதான் சரி என நினைத்துக் கொண்டு தன் வேலைகளை முடித்துக் கொண்டு அறையினுள் வந்தாள். பின் எதுக்கும் ஷாம்க்கு call எடுத்து பார்ப்போம் என call பண்ணினாள் answer பண்ணுவதாக இல்லை

கண்களில் கண்ணீர் வர ஜெயாவிற்கு அழைத்தாள்., hello ஜெயா என்னும் போதே குரலில் நடுக்கம் தெரிந்ததும் என்ன Uv ஏன் ஒரு மாதியா பேசுர . அவன் என் வாழ்க்கையயே பாழாக்கிடான்டி., யாருடி என்ன பண்ணாங்க தெளிவா சொல்லு., குகன் என் லைப்ப நாசமாக்க திட்டம் போட்டிக்கான் ச்சே இப்டி பண்ணுவான்டு நினைக்கவே இல்ல ஷாம்ட போனுக்கு நானும் அவனும் ஒன்னா இருந்தமாதி போட்டோ அனுப்பியிருக்கான் என நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்., ராஸ்கல் அவன சும்மா விடக்கூடாது நீ call பண்ணி பேசு என்று கூறி ஆறுதல்களையும் கூறி போனை வைத்தாள்., குகனுக்கு call பண்ணினாள் switch off என்றே வந்தது.,

மற்றொரு பக்கம் இரு கைகள் தட்டப்பட்டு சத்தமாக சிரித்து நான் கொழுத்திவிட்ட தீ புகைய ஆரம்பிச்சிட்டு என ஒரு உருவம் மகிழ்சியில் வாய் விட்டு கூறிக் கொண்டிருந்தது., ஷாம் மாலை நேரம் வீட்டிற்கு வந்து சேர்நதான். அவனின் வரவிற்காக காத்திருந்த Uv அவன் வந்ததும் என்னங்க நா சொல்றத கேளுங்க அது நா இல்ல ப்ளீஸ் நம்புங்க என கண்ணீர் விட்டாள், கையால் அவள் முகத்திற்கு நேராக நிறுத்து என்றவாரு காட்டி தெரியும் என்றான். என்ன சொல்றிங்க புரியல ., சொல்றன் சாப்டியா , இல்ல நீங்க வார வரைக்கும்தான் பாத்துகிட்டிருந்தன்., சாப்பாடு எடுத்து வை சாப்டு பேசுவோம் நா ப்ரஷ்ஷாகிட்டு வாரன் என்று பாத்ருமினுள் புகுந்து கொண்டான்., ஏதும் புரயாமல் சாப்பாட்டு வேலையை பார்க்கச் சென்றுவிட்டாள்.

இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடிந்ததும் தோட்டத்திற்கு Uv ஐ அழைத்துச் சென்றான்., உங்களுக்கு எப்டி தெரியும் அது நா இல்லன்னு என Uv கேட்க., ம் சொல்றன் என்று ஆரம்பத்தில் இருந்து நேற்றைய இரவு வரை நடந்தவற்றை கூறி முடித்தான்., என்னங்க சொல்றிங்க இவ்ளோவெல்லாம் நடந்திருக்கா ஏன் என்கிட்ட அப்பவே சொல்லல .,நா உன்கிட்ட இத பத்தி பேசுனா எந்த ஆதாரமும் இல்லாம உன்ன சந்தேகப் பட்றமாதி ஆயிடும் அதுவும் இல்லாம உன்ன வீணா மனசு கஷ்டபடுத்துறமாதி ஆயிடும் ., ஓஹ் அதுதான் கல்யாண நேரத்துல அவ்ளோ டென்சனா இருந்தீங்களா., ம் ஆமா உன்கிட்ட நைட் கோவிச்சிட்டு இங்க உட்காந்து யோசிச்சு பாத்தன்...உனக்காகதான் அவன் இப்டிலாம் பண்றான இருந்தா உன்கிட்ட வந்து பேசிக்கோணும் இல்ல என்கிட்டயாச்சும் வந்து நேர்ல பேசிக்கோனும் ஆனால் இது எதுவுமே பண்ணாம எதுக்கு இப்டி பண்ணணும்

அது மட்டுமில்ல நா இது உண்மையான photoவே இல்லன்ங்குறத என்னோட software மூலமா கண்டுபிடிச்சுட்டன் இத ஏன் பண்ணோணும் யார் பண்றாங்கங்குறதுதான் புரியல.

((,Sߪa

வினாவின் விளிம்பில் .(complete)Where stories live. Discover now