பெயின்ட் வாளி கீழே விழுந்த சத்தம் பக்கத்து அறையில் இருந்த நண்பர்கள் மூவருக்கும் செவியில் விழுந்தது அவர்கள் வந்து பார்க்கும் போது மாலினி அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் .,
Uv - என்னடா பவி டிரஸ்ஸெல்லாம் பெயின்ட்
கீதன்- டேய் உன்ன சுவருக்குத்தான அடிக்க சொன்ன உங்க ரெண்டு பேருட டிரஸ்ஸுக்குமா அடிக்க சொன்ன பெயின்ட் இருக்க விலைக்கு தேவையாடா இது,
பவித்திரன் மலினியை அவசரப்பட்டு தூக்கி விட்டோமே கோபித்துக் கொண்டாளோ என நினைத்து ஏதோ சிறுசந்தோசமும் மனதில் எட்டிப் பார்க்க நகத்தை கடித்துக் கொண்டான்,
கீதன் பவி இல்ல இவன் பாவி நாம இங்க யாரோட கதைக்குரோம் அவன் நிலத்த பாத்து வெக்கப் பட்றான் கருமம் என தலையில் அடித்துக் கொண்டான் .....................................
மறு நாள் காலையில் கீதன் கூறினான்,
வந்த நேரத்துக்கும் இங்கையேதான் எல்லாரும் சுத்திக்கிட்டு இருக்கிங்க பக்கத்துல எங்கட தோட்டம் இருக்கு போய் சுத்தி பாத்துட்டு வாங்க நாலு பேரும் .,
ஷாம் -நாங்க ஊர் சுத்தி பாக்கவா வந்தம் வீட்ல எவ்ளோ வேல இருக்கு அத விட்டுட்டு...................
கீதன் - அதெல்லாம் செய்ய ஆள் இருக்கு நாளன்னைக்குதான கல்யாணம் ஒன்னும் அவசரமில்ல சொன்னா கேளுங்கப்பா என கண்ணை மலினி பக்கம் காட்டி செய்கையால் உணர்த்தினான் மலினிக்கு தெரியாத வண்ணம்.,
புரிந்து கொண்ட ஷாம் ok நீங்களும் வாங்க என அழைக்க இல்ல இங்க என்னை தேடி ஆட்கள் வருவாங்க நீங்க போய்ட்டு வாங்க என கூற அப்போ சியாமளாவ அனுப்புங்கள இல்ல அவ கல்யாண பொண்ணு இப்ப வெளிய போறது நல்லதில்ல.... Uv கூட்டிட்டு போ என அனுப்பி வைத்தான்
அங்கு சென்றதும் மெதுவாக கீதனின் யோசனையை Uv யிடம் கூறினான் ஷாம் , உயர்ந்து ஓங்கி வளர்ந்த தென்னந் தோப்பில் மெல்லிய தென்றலின் பரிசத்தில் ஓலைகள் இசை மீட்டி வரவேற்றது ஏதோ புத்துணர்வு ததும்ப Uv ஷாமுடன் கைகளை கோர்த்துக் கொண்டு முன்னே நடந்தாள் அதன் பின் மாலினி அதன் பின் பவித்திரன் வரிசையாக நடந்து சென்றனர் மாலினி அங்கே இளநீர் குலைகளாக தொங்குவதை கண்டு Uv இளநீர் குடிப்பமா என கேட்டதுதான் தாமதம் எல்லோரையும் முந்திக் கொண்டு பவித்திரன் கீழே கிடந்த காய் பரிக்கும் கொக்கிகளால் இளநீர்களை பரித்து போட்டான் அருகில் கிடந்த கத்தியால் அதை அழகாக சீவி மாலினியிடம் நீட்டினான் எதுவும் கூறாமல் Uv யை பார்த்தாள் uv கண்களால் வாங்கு என உத்தரவிட வாங்கி குடிக்க தொடங்கினாள் எதையோ சாதித்தது போல் சந்தோசப் பட்டக் கொண்டான் பவி,.
VOCÊ ESTÁ LENDO
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasiaகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்