அவளை அனுப்பி வைத்துவிட்டு அவனது திட்டத்தை எவ்வாறு செயற்படுத்துவது என யோசித்துக் கொண்டிருந்தான். ஏதோ ஓர் முடிவுக்கு வந்தவனாக அறைக்கு வந்து பார்த்தவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த Uv ஐ பார்த்தவன் இதுதான் தருணம் என எண்ணியவன் அவளது போனை எடுத்து பார்த்தவன் Uvற்கு வரும் அழைப்புகள் யாவும் தன்னுடைய போனிற்கும் வருமாறு செட்டிங்களை செய்துவிட்டு போனை இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவனும் தூங்கிவிட்டான். மறு நாள் வழமை போல நேரத்துடன் எழுந்து வேலைக்குச் சென்றுவிட்டான். Uvயும் காலை வேலைகளை முடித்துக் கொண்டவள் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தாள்.
.அந் நேரம் குகன் போனில் அழைத்து என்ன Uv call பண்ணி இருந்த, ஏன்டா இப்டி பண்ண நா ஒனக்கு என்ன அநியாயம் செஞ்ச என கோவத்தில் கொந்தளிக்க , என்ன சொல்ற நீ எதுவுமே புரியல எனக்கு , நீ ஒரு நல்ல ப்ரண்டுன்டு நம்புன எனக்கு நல்ல கல்யாணப் பரிசு தந்த, கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிட்டா, ஏன் உன் திட்டம் பழிக்கலன்டு கவலைல கேக்குறியா., Uv stop it என்ன பைத்தியம் மாதி பேசுற நா என்ன பண்ண., எதுக்குடா என் husband ட போன்கு தேவைக்கில்லாத messages பண்ற எங்கள பிரிக்கதான., what நானா Uv நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கா நா எதுவும் பண்ணல., நீ பண்ணாமய நாம இரண்டு பேரும் இருக்குறமாதி போட்டோ எடிட் பண்ணி அவர்கு அனுப்பி இருக்க இத வேற யார் பண்ற தேவ இருக்கு . , நீ என்ன சொல்ற நாம இரண்டு பேரும் இருக்கமாதி போட்டோவா ஐயோ எனக்கு ஒன்னுமே புரியலயே இங்க பாரு நா உன்ன நேசிச்சது கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்டது எல்லாம் உண்மதான் ஆனா இந்த மாதி cheap ஆன காரியம் பண்றவன் நா இல்ல., ok நீ கல்யாணத்துக்கு வராதது ஒரு நண்பனா நினைச்சா நீ வந்திப்ப அது மட்டுமில்ல நா உனக்கு நேத்து எவ்ளோ call எடுத்திப்பன் ஏன் ஆன்ஸ்வர் பண்ணல
நா உன் கல்யாணத்துக்கு ஏன் வரல தெரியுமா மாமா இறந்துட்டாரு நீ நேத்து call பண்ணப்போ பண்ண வேண்டிய சடங்குகள பண்ணதால உறவு காரங்க எல்லாரும் வந்திருந்தாங்க எல்லாரையும் அனுப்பிட்டு இப்பதான் போன பாத்தேன் ஏன் இத்தன தடவ call எடுத்திருக்கன்டு தெரியாமதான் இப்ப எடுத்தன்,. i'm really very sorry நடந்த விஷயம் தெரியாம பேசிட்டன் ஏன் இத நீ அன்னைக்கே சொல்லல., உனக்கு கல்யாண நாள் என்னால அந்த சந்தோஷம் கெட்ற கூடாதுன்னுதான் சொல்லல ஆனா என்ன நம்பு plzநா இத பண்ணல உன் லைப்ப கெடுக்குற மாதி எந்த காரியமும் பண்ண மட்டேன் அது மட்டுமில்ல நா என் மாமா பொண்ணு சியாமலாவதான் கல்யாணம் பண்ண போரேன் ஏன்னா நாதான் அவள இப்ப பாத்துக் கொள்ளனும் இரண்டு பேரும் தனியா ரொம்ப நாள் ஒரே வீட்ல இருந்தா உலகம் தப்பா பேசும் இதுக்கு ஒரே வழி நா கல்யாணம் பண்றதுதான்.
இப்டிலாம் இருக்கும் போது நா ஏன் உன்ன டிஸ்டப் பண்ணோனும் , ஆமா இவன் சொல்றதும் சரிதான் சரி பாக்கலாம் என எண்ணியவள் நா என் புருஷன ரொம்ப லவ் பண்றன் அவர்ட சந்தோஷமும் என்னால கெடுது அந்த கோவத்துல உண்ண திட்டிடன் சாரிடா , its ok இப்பவாச்சும் புரிஞ்சிகிட்டியே bye, ம் bye .இவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஷாமின் கண்களில் கண்ணீர் பெருக்குதான் என்னோட யுவனிகா என் மேல எவ்ளோ லவ் வச்சிருக்கா நா போய் ச்சே என தன்னையே கேவலமாக எண்ணிக் கொண்டவன் நா இதபண்ணது ஒன்னும் அவ மேல சந்தேத்தால இல்லையே உண்மைய தெரியாம அவள புரிஞ்சிக்காம வாழ்ந்தா எங்க வாழ்க்கைல ஒரு திருப்தி இருக்காதுன்னுதான இப்டி செஞ்சன் என தன்னைதானே சமாதானப்படுத்திக் கொண்டவன் வீட்டுக்கு போய் முதல்ல அவள சந்தோஷ படுத்தனும் உண்மையையும் சொல்லனும்.
அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் போதே யுவனிகாவின் நம்பருக்கு இன்னொரு அழைப்பு வந்தது அதை கையில் எடுத்தவன் ச்சே இதுக்கு மேலையும் நா இந்த காரியத்த செய்ய கூடாது என அந்த அழைப்பை ஏற்காது விட்டுவிட்டு office வேலைகளில் மூழ்கினான்மாலை நேரத்துடன் வீட்டிற்கு அவளுக்கு பிடித்த வெள்ளை றோஜாவை வாங்கி வந்தான் அங்கு அவன் கண்ட காட்சி கையில் கட்டு போடப்பட்டு கழுத்தில் தொங்கவிடப்பட்ட கையுடன் இருந்த யுவனிகாவைத்தான்.
மறு பக்கம் shopping சென்றிருந்த ஜெயாவிடம் hi என்று ஒருவன் வந்தான் அவனை பார்ர்த்து திரும்பிக் கொண்டவள், ஒரு நிமிஷம் சொல்றத கேளு ஜெயா, என்ன சொல்ல போற, இன்னும் உனக்கு என் மேல லவ் வரலயா, நாதான் சொல்றனே எனக்கு லவ் வரல ப்ளீஸ் நீ வேற யாரயாவது கல்யணம் பண்ணிக்கோ, எனக்கு உண்ண தவிர வேற யார் மேலயும் லவ் வரலயே , நீ சொன்னா கேக்க மாட்ட பாக்கலாம் எவ்ளோ நாளைக்கு இப்டியே இருந்துடுவன்னு, நானும் பாக்கதான் போறே நீயும் எவ்ளோ நாளைக்கு யாரையும் லவ் பண்ணாமலே இருக்க போறேன்னு, bye .... இவன் வேற என் உசுற வாங்குறத்துக்குன்னே வாரன் என சலித்துக் கொண்டாள்.
.
YOU ARE READING
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasyகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்