அன்று இரவு முழுவதும் தனிமையில் அழுது புலம்பிய படியே ஆசிரமத்தில் உறங்கி போனாள்., மறு நாள் காலையில் பாடசாலைக்குச் சென்று மனதில் இருப்பவற்றை மனம் திறந்து குகனிடம் கூறி விடலாம் என முடிவு செய்து படசாலைக்கு கிழம்பினாள் பாடசாலைக்கு வீதியில் மறுபக்கம் நின்று பாதையை கடப்பதற்கு நின்று கொண்டிருக்கும் போது குகனும் Uv யும் பேசிக் கொண்டிருந்தனர் அதை மறு பக்கத்தின் வீதியோரம் நிற்கும் மாலினி பார்த்துக் கொண்டிருந்தாள் குகன் Uv யிடம் கையில் ஒரு பூவையும் ஒரு கார்ட் ஒன்றையும் நீட்டினான் அதை பார்க்க propose பண்றவங்க கொடுக்குற கார்ட் போன்று இருந்தது அதை வாங்கிய Uv யும் சந்தோஷமாக அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அதை பார்த்தவள் கண்கள் கலங்க வீதியில் வந்த காரை கவனிக்காது பாதையை கடக்கும் போது அவள் மீது வந்து மோதியது
அதை பார்த்த குகனும் Uv யும் பரிதவித்து மலினியிடம் ஓடிச் சென்றனர் அவள் அடிபட்டு சிறிது தூரம் தள்ளி மணலில் விழுந்து மயங்கி கிடந்தாள்., உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது தலையில் சிறிதளவு அடி பட்டிருந்தது அதானால் ஏற்பட்ட மயக்கம்தான் மேலும் கை மற்றும் கால்களில் சிறிய காயம்கள் உராய்ப்பினால், பயப்படுவதற்கு தேவை இல்லை எனவும் மாலையில் அழைத்துச் செல்ல முடியும் எனவும் அந்த பரிசோதனை செய்த வைத்தியர் கூறி முடித்தார்., அப்போதுதான் நிம்மதி பெரு மூச்சுவிட்ட Uv யும் குகனும் Uv யின் கையில் கொடுக்கப்பட்ட பூவையும் கார்டையும் எங்கே காணோம் என கேட்க தலையில் கைவைத்து miss ஆகிட்டுடா என்றாள் சரிபரவால நாம இத அப்றமா சொல்லிக்கலாம் என கூறிவிட்டு மாலினியின் அறையினுள்ளே நுழைந்தனர் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தவளை பார்த்து என்ன மாலினி எப்டி இருக்கு pain என கேட்டாள் Uv அதற்கு மாலினி நீ வாய மூட்றியா தயவு செஞ்சு என் முன்னாடி நிக்காத இங்க இருந்து போய்டு என வாய்க்கு வந்த விதத்தில் எறிந்து விழுந்தாள் அடிபட்ட வலியில்தான் இவ்வாறு பேசுகிறாள் என நினைத்து அங்கிருந்து Uv கிளம்பியதும் சிறிது நேர மெளனத்தின் பின் குகன் பேச ஆரம்பித்தான் என்ன மாலு ஏன் இப்டி நடந்துகிட்ட அவ உன் மேல உள்ள அக்கரைலதான கேட்டா.,
நீ கொஞ்சம் பேசாம இருக்கியா எல்லாம் உன்னாலதான் எல்லாத்துக்கும் நீதான் காரணம்.,
என்னது நா காரணமா என்ன சொல்ற
.ஆமா நீ எதுக்குடா அவள லவ் பண்ற நா உன்ன லவ் பண்றேன்டா ., என்ன சொல்ற நா Uv ய லவ் பண்றேன் அது உனக்கும் தெரியும்தான இப்ப இப்டி சொல்ற விளையாடாத.,
இல்லடா சீரியஸாதான் சொல்றன் ப்லீஸ் புரிஞ்சுக்கோ .,
ஐயோ உன்ன பவித்ரன் லவ் பண்றான்டி (பாகம் 16 ல் உள்ள நபர்) அவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான் நீ ஏன் அவன ஏத்துக்க மட்டேங்குர அவன் உன்ன நல்லா பாத்துப்பான் அவன் குடும்பத்துல உள்ளவங்க எல்லாருக்கும் உன்ன புடிச்சிருக்கு இன்னைக்கு கூட என ஏதோ பேச வாயெடுக்க தயவு செஞ்சு பவித்ரன் புராணத்த நிறுத்ரியா காதெல்லாம் ஹீட்டாகுது என மாலினி சொல்லிக் கொண்டிருக்கும் போது may i come in என கூறிக்கொண்டு ஆசிரமத்து பெண் உதவியாளர்கள் அறையனுள் நுழைந்தனர் அவர்களிடம் மாலினியின் சிகிச்சை பற்றிய விவரங்களை கூறவிட்டு வெளியேறினான்.
ESTÁS LEYENDO
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasíaகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்