1

7.7K 220 507
                                    

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே என்று தனது வாய்க்கு வந்த ஒரு பாடலை முணுமுணுத்தவாறே அந்த கலைக்கல்லூரியின் பறந்து விரிந்த மைதானத்தில் அந்த இளந்தென்றல் காற்று உடல் தழுவும் வேளையில் தன் கயல் விழிகள் இரண்டும் யாரின் வரவையோ எதிர் நோக்க வெண்டை பிஞ்சு விரல்கள் தனது hair கிளிப்பால் சிறை செய்திருந்த முன்னிருமுடிகள் அவளது பிறை நெற்றியை முத்தமிடும் ஆவலில் சிறையினை மீறி வெளி வந்து அவள் முன்னுச்சியில் அசைந்தாடுவதை ஒதுக்கிவிட அவளது வாழைத்தண்டை போன்ற கைகளில் இருந்த வளையல்கள் செல்லமாய் சிணுங்கியது .

அவளது மான்விழியின் அலைப்புறுதல் அவளது தோழியை கண்டதும் மாதுளை இதழ்கள் பிரிந்து ஒரு சிறு புன்னகையை சிந்த அவள் அருகில் வந்தமர்ந்தாள் அவளது தோழி வேதித்யா "ஹாய் ஆதி"என்ற அழைப்புடன் .

அவளது தோழியின் அழைப்பில் அவளை கண்டு புன்னகைத்த ஆதிரா "வாடி வா இவ்ளோ நேரமா வரதுக்கு கிளாஸ்க்கு போலாமா டி "என்க அவளோ ஆதிராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவள் பார்வையை கண்டு தன் வில் போல் வளைந்த புருவத்தை சுருக்கிய ஆதிரா "என்னடி அப்டி பாக்குற ?"என்க

வேதித்யாவோ ஒரு பெருமூச்சு விட்டவள் "ஹான் பொண்ணா பொறந்து பெரும் பாவம் பண்ணிட்டேன் டி "என்க

ஆதிராவோ மேலும் புருவத்தை சுருக்கியவள் "என்னடி லூசாட்டம் ஒளறிட்டிருக்க nutuh கழண்டுருச்சா?"என்க

அவளோ ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டவள் "இப்டி லட்டு மாறி இருக்கியே பையனா பொறந்துருந்தா ரெமோ படத்துல வர சிவகார்த்திகேயன் மாறி துரத்தி துரத்தியாச்சும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பேன் டி இப்டி மிஸ் ஆயிருச்சே"என்று வராத கண்ணீரை துடைத்து கொள்ள

தன் தோழி கூறிய விதத்தில் சில்லறையை சிதற விட்டார் போல் சிரித்தவள் "போடி லூசு ஆனா இப்போவும் ஒன்னும் கெட்டு போகலடி article 377 படி கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன சொல்ற"என்று கேட்டு கண்ணடிக்க

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now