6

2K 155 85
                                    

வெளியே வண்டி எதுவும் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்த ஆதேஷின் கண்களில் கார்,ஆட்டோ போன்ற எந்த வண்டியும் தட்டுப்படாமல் போக என்னடா இது ஒரு வண்டியையும் காணோம் என்று நினைத்தவன் சற்று அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து அங்கே போடப்பட்டிருந்த மண் ரோட்டில் நின்று இடுப்பில் கை வைத்தவன் சுட்டெரிக்கும் வெயிலில் நெற்றியில் துளிர்ந்த வியர்வையை துடைத்துவிட்டு வலதுப்புரம் திரும்பி நிற்க அவன் பின்னே "தம்பி "என்று ஒரு ஆழ்ந்த குரல் வெகு அருகாமையில் கேட்டது .

தனக்கு வெகு அருகாமையில் கேட்ட அந்த குரலில் லேசாய் திடுக்கிட்டவன் பின்னே திரும்பி பார்க்க அவன் முகத்திற்கு நேராய் தாடியும் மீசையும் முகத்தை சுற்றி மண்டிக்கிடக்க கண்கள் கருவளையம் போட்டு உள்ளே அமிழ்ந்து கிடைக்க கையில் தடியுடனும் தலைமுடி ஆங்காங்கே பரட்டையாய் இருக்க ,பட்டினியில் பலநாள் கிடந்தவர் போல் அவர் உடல் இளைத்து கருத்து மெலிந்து கிடக்க அவர் அணிந்திருந்த உடை ஆங்காங்கே கிழிந்து தொங்கியது .

இத்தனை முதுமையிலும் கண்களில் தெரிந்த ஒளி சற்றும் குறையாதிருக்க அவனை நோக்கி ஓர் மர்மச்சிரிப்பை உதிர்த்தார் அப்பெரியவர் .

முதலில் சற்றே திடுக்கிட்டவன் பின் அவரிடம் "யார் அய்யா நீங்க இங்க என்ன பண்றீங்க என்றவன் தன் பார்வையை அப்படியும் இப்படியும் சுற்ற விட்டு இங்க வண்டி எதுவும் கிடைக்காதா ?"என்று கேட்டு விட்டு திரும்பி நிற்க

அவரோ சம்மந்தமே இல்லாமல் "இத்தனை தொலைவு எம் தாய் வழித்துணையாக வந்த உமக்கு இனி அவரை அழைத்து செல்லவோ வழி இல்லாதிருக்கும் "என்க ஏனோ ஆதேஷின் முகத்தில் என்னென்று தெரியாத ஓர் பாவம் குடியேறி அடுத்த நொடியே அவர் புறம் திரும்ப அங்கே ஓர் ஆள் நின்றதன் அடையாளமே இல்லாதிருந்தது .

அதிர்ந்தவன் சுற்றி முற்றி தன் பார்வையை திருப்ப அங்கே யாருமே இங்கே இத்தனை நேரம் இருந்ததற்கான சுவடே இல்லை காற்றில் கரைந்தார் போல் மறைந்திருந்தார் அம்முதியவர் "ரிடிகுலஸ்"என்று முணுமுணுத்தவன் அவர் நின்ற இடத்தை பார்க்க அங்கே ஏதோ ஓர் காகிதம் ஓர் கல்லின் கீழ் வைக்கப்பட்டிருந்தது .

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now