epilogue

2.4K 139 69
                                    

நீலகாந்தனின் கதையை முடித்து சம்ஹித்த வம்சத்தை வேரறுத்து அதர்மத்தினை அழித்திட்ட நால்வரும் ஆதிரா மற்றும் ஆராதனாவின் பாட்டியையும் அழைத்துக்கொண்டு தமது ராஜ்யத்திற்கு வந்து சேர்ந்தனர் .

அவர்கள் வரும்வரை வேதித்யாவும் அஜயும் அந்த ராஜ்யத்திலேயே இருக்க வைக்கப்பட்டிருக்க அவர்கள் வெற்றி வாகை சூடி வருகை புரிந்ததை அந்த ராஜ்யமே கொண்டாடியது .

இத்தனை நாட்களாய் பூட்டி இருந்த ஆதவகுலத்தின் குலதெய்வக் கோவிலிற்கு அந்த குல மக்களோடு சென்று வழிபட்டவர்கள் இதற்கு பின் தனியாய் காட்டிற்குள் வசிப்பதை விட ஊருடன் கூடி வாழ்வதே சாலச்சிறந்தது என்று முடிவு செய்து அந்த மக்கள் அனைவரும் மங்கலாபுரியிலேயே குடில்கள் அமைத்து விவசாயமும் இன்ன பிற தொழில்களும் புரிய ஆரம்பிக்க ஆதிராவும் ஆதேஷும் குடும்பத்துடன் வேதித்யா மற்றும் அஜயுடன் தமது ஊரிற்கு கிளம்பினர்.

கல்லூரி ரிப்போர்ட்டில் அங்கே நடந்த சில சம்பவங்களை மக்களாகவே ஜோடித்து பெரும் அசம்பாவிதம் நடப்பதாக ப்ரம்மையில் வாழ்ந்து வந்ததாகவும் ,அங்கே எந்த பிரெச்சனையும் இல்லை என்றும் ரிப்போர்ட் கொடுத்தவர்கள் அடுத்து சென்று நின்ற இடம் ஆதிராவின் வளர்ப்பு பெற்றோரான மீனாட்சி சொக்கலிங்கத்தின் வீட்டில்.

ஆதேஷுடன் அவள் வருவதை கண்ட இருவரும் அவளிற்கு உண்மை அனைத்தும் தெரிந்திருக்கும் இனி அவள் தம் மகள் இல்லை என்று கவலையுடன் நோக்க அவளோ அவர்களின் எண்ணத்தை பொய்யாக்குவதை போல் luggageay வாசலிலேயே போட்டவள் ஓடி சென்று பாய்ந்து அணைத்துக்கொண்டாள் இருவரையும் "பாப்ஸ் மீ எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா ரெண்டு பேரையும்."என்று இருவரின் கன்னத்திலும் இதழ் பதிக்க அவர்கள் நம்பமுடியாது ஆனந்த அதிர்ச்சியில் இருந்தனர் .

இருவரின் முகத்தையும் பார்த்து குறும்பு பொங்க சிரித்தவள் "என்ன பாப்ஸ் மீ நா இல்லாத நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருந்த மாறி இருக்கு ஏன்டா வந்தன்ற மாறி பாக்குறீங்களே "என்றவள் பின் பயந்ததை போல் பாவனை காட்டி "பாப்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ் தம்பி பாப்பா வர போகுதுன்னு மட்டும் சொல்லிறாதீங்க "என்க

ஆதிரா(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora