11

2.1K 148 143
                                    

அஜயின் கையில் தனது bracelette டை பார்த்த ஆதேஷ் அதன் அருகில் வேகமாய் செல்ல அஜயோ தன் கையை தூர விலக்கியவன் "ஆனா இதை குடுக்குறதுக்கு முன்னாடி என்னோட கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லணும் "என்க

ஆதேஷோ அவனை முறைத்தவன் "என்னோட பொருளை எடுத்துக்க எவன்கிட்டயும் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை "என்க

அவனோ நக்கலாய் சிரித்தவன் "எனக்கு விளக்கம் குடுக்க வேணாம் ஆனா நா எனக்கு தெரிஞ்சதை எல்லாம் ஆதிரா கிட்ட சொன்னா அவளுக்கு நீ விளக்கம் குடுக்க வேண்டி வரும்ல லாயர் சார் "என்க

அவன் லாயர் சார் என்று கூறியதில் ஆதேஷின் கண்கள் ஒரு நொடி திகைக்க அஜயோ விஷமமாய் சிரித்தவன் "என்ன லாயர் சார் இருபத்தி எட்டு வயசுல இது வரைக்கும் ஐம்பது கேஸுக்கு மேல வாதாடி ஜெயிச்சுருக்கீங்க ,இந்தியாவோட பெஸ்ட் கிரிமினல் லாயர் னு வாதாட ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே பேர் வாங்கிருக்கீங்க 2 multinational கம்பனிஸ்க்கு லீகல் advisoraah இருக்கீங்க இந்த சின்ன கேள்விக்கு போய் தடுமாறுறீங்க ?"என்க

ஆதேஷோ கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவன் அவனை உறுத்து நோக்கினான் "நீ முதல் தடவ என்ன பாக்குற பார்வையிலேயே நெனச்சேன்டா என்ன பத்தி ஏதோ தெரிஞ்சவன் தான் நீ னு ஆனா இவ்ளோ தெரிஞ்சு வச்சுருப்பனு நினைக்கல ."என்றவன் பின் சற்று நிதானித்துவிட்டு "இனியும் மறச்சு வைக்க ஒன்னும் இல்ல இப்போ என்ன கேக்கணும் கேளு அதுக்கு முன்ன இதெல்லாம் எப்படி தெருஞ்சுகிட்டன்னு சொல்லு" என்க

அஜயோ "இப்போ நா ஒரு பேமஸ் wildlife photographer ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நா famouslaam இல்ல என்னோட போட்டோவை என்னோட அனுமதி இல்லாம ஒரு wildlife journal வெளியிட்டுச்சு கிட்ட தட்ட மயக்கம் என்ன தனுஷ் மாறினு வச்சுக்கோயேன் .என் lifeh போச்சுன்னு நா நெனச்சுட்டு இருக்கேல தான் என்ன மாறியே இன்னும் சில wildlife photographersoda போடோஸும் அவுங்க அனுமதியே இல்லாம வெளியிட்டருக்காங்கனு தெரிஞ்சது .அப்போ எங்கள்லயே கொஞ்சம் well off familyla இருந்த ஒருத்தன் எங்க எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு கேஸ் file  பண்ணான் .அந்த caseah handle பண்ணவன் நீ தான்.கண்டிப்பா தோத்துரும்னு நெனச்ச caseah நாலே hearingla முடுச்சு எங்களுக்கு சாதகமா தீர்ப்பு வாங்கி தந்த .அதுல இருந்து தான் என்னோட careereh ஸ்டார்ட் ஆச்சு சோ என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத முகங்கள்ல நீயும் ஒன்னு.

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now