Episode 10

11 3 0
                                    

நீதிபதி அவர்களே.. இவரது பக்கத்தில் இருந்து வழங்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் குற்றம் சுமத்தப்பட்ட sir. French க்கு எதிராகவே உள்ளது. எனவே அவருக்குரிய தண்டனையை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இல.40421 ஆம் வழக்கில் mrs. Lora Wilson வெற்றி பெற்றுள்ளார். அனுமதியின்றி அனாவசியமாக வனப்பகுதிகளில் காடழிப்பு மற்றும் கட்டிட அமைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட sir. French அவர்களுக்கு நான்கு வருட சிறைத் தண்டனையும் இரண்டு கோடி டொலர் பண அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மேலும் அவரிற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தலா பத்து இலட்சம் பண அபராதமும் ஒன்றரை வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது. மேலும் நீதிமன்றம் சார்பாக இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன் நின்ற நிறை மாத கர்ப்பிணி miss. Lora Wilson அவர்களின் துணிவையும் திறனையும் பாராட்டும் முகமாக அரசாங்க வனப் பாதுகாப்பு சபையில் ஓர் அதிகாரியாகும் வரப்பிரசாதத்தை வழங்குகிறோம்..

Lora Wilson, மிக திடமான மனதையும் மலர் போன்ற மென்மையான குணத்தையும் உடையவள். நாணாற் புல் தொடக்கம் ஆல மரம் வரை அனைத்து மரஞ் செடி கொடிகள் மீதும் அதிக அக்கறை கொண்டவள்.

தற்போதும் வன அழிப்பில் ஈடுபட்ட ஒரு தொழில் அதிபரையே சிறைக்கு அனுப்பினாள்.

மறு நாள் காலையில் வனப் பாதுகாப்பு அதிகாரியாக தொழில் அதிபரால் அழிக்கப்பட்ட காட்டுப்பதுதிக்குச் சென்றாள்.

மரங்கள் அனைத்தையுமே வேருடன் பிடுங்கி எறித்திருந்தனர். உச்ச வெயிலும் வரண்ட நிலமும் ஒரு மேகமும் இல்லாத வானமும் காணும் இடமெல்லாம் பரவியிருந்தது.

Lora வின் உச்ச கட்ட கோபம், கண்ணீராக வெளிவந்தது. கண் கலங்கிய நிலையில் நின்றிருந்த அவளின் , பின்னால் இருந்து அவளது தலை சீவப்பட்டது .

சிறைக்கு அனுப்பிய தொழில் அதிபரின் கையாற்களே அவ்வாறு அவளை கொலை செய்தனர். அப் புழுதியிலே அவளை குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.

அன்று இரவு, பல மாதங்கள் கழித்து இடி மின்னலோடு மழை பொழிந்தது. அவள் புதைக்கப்பட்ட இடம் வெடித்து அதற்குள் நீரும் சேரும் சேர்ந்தது. அவளை அவை நிலமட்டத்திற்கு தூக்கி வைத்தன. பின் இயற்கை அவளுக்கு பிரசவம் பார்த்தது. தேக ஆரோக்கியத்துடன் ஒரு பெண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள்.

அங்கு வந்த இயற்கை மாதா அக் குழந்தையை தன் கைகளுக்குள் எடுத்து இளம் புன்னகையுடன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு வானை நோக்கி உயர்தியவளாக

" இவள் என் மகள்..
எம் இயற்கையின் நிலைப்பிற்கான மூச்சு..
Abelia .. "

என பிரசித்தி படுத்தினாள். கூடவே இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பும் அதற்கான மாய சக்தியையும் வழங்கினாள்.

தன் மனைவி இன்னும் வீடு திரும்பாததனால் Wilson சில பொலிஸ் அதிகாரிகளுடன் அங்கு வந்தார். அவர்களது வருகையை கண்டதும் , இயற்கையின் மாதா தனது கைகளை அசைப்பதனூடாக நிலத்தை பிளந்து Lora வின் உடலை மீண்டும் நிலத்தின் உள்ளே வைத்தாள். மீண்டும் நிலத்தை மூடி அதன் மேல் செழிப்பான பூக்களை கொண்ட புற்களை படரவிட்டாள். அதன் மீது Abelia வை வைத்து விட்டு அங்கிருந்து மறைந்து சென்றாள். இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்தது.

Wilson அந்த குழந்தையை கண்டு கொண்டான். இது யார் குழந்தை என்று தெரியாமல் அவளை எடுத்துக் கொண்டான். மனைவியை எவ்வளவு தேடியும் அவர்களுக்கு அவளை கண்டறிய முடியவில்லை.

அன்றிலிருந்து Abelia வை தன் மகளென அறியாமலே தன் மகளாய் எண்ணி வளர்த்தான். சாதாரண ஓர் பெண் பிள்ளையாகவே அவள் வளர்ந்தாள்.

எனினும் அவளை ஒவ்வொரு இரவும் இயற்கையின் மாதா வந்து சந்தித்து கொஞ்சி விளையாடி விட்டு செல்வாள். Abelia அது ஒரு கனவு என்றே எண்ணினாள்.

எனினும் அவளது பதின் எட்டாவது வயதுப் பிறந்த நாளில் இயற்கை மாதா அவள் முன் தோன்றினாள்.

ருத்ர தாண்டவம்Donde viven las historias. Descúbrelo ahora