100% எடுக்கனும்.. first வரனும்.. இந்த உலகத்ல losers க்கு இடம் கிடையாது..
Gloria நன்றாக படிக்கும் ஒரு மாணவி. தற்போது தரம் ஐந்தில் கல்வி கற்கிறாள். வகுப்பில் இரண்டாம் இடம் வந்ததுக்காகவே தந்தை இவ்வாறு திட்டினார்.
எனவே தனது மனது சிறிது அமைதி பெற வேண்டும் என்பதற்காக அவள் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகில் உள்ள நதிக்கரைக்கு சென்றாள். நதியின் நடுவில் திமில் போன்ற அமைப்புடைய கல்லின் மீது அமர்ந்து வாய்விட்டு சத்தமாக அழுதாள்.
திடீரென அவளது உடலில் சில நீர் துளிகள் தெளிக்கப்பட்டது. உறத்த குறலில்
அம்மா.. leave me alone..
சில நொடிகளுக்கு பின் மீண்டும் நீர் தெளிக்கப்பட்டது. உடனே அழுவதை நிருத்தி விட்டு திட்டுவதற்காக எழுந்த போது அங்கு யாரும் இருக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமே இருக்கவில்லை.
மீண்டும் நீர் தெளிக்கப்பட்டது. உடனே தெளிக்கப்பட்ட பக்கமாக நதியை உற்றுப் பார்த்தாள்.
நீல நிறத்திலான ஒரு பெரிய மீன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. வழியும் கண்ணீரை துடைத்த படி கல்லில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
தனது கையை நீரிற்குள் இட்டு அம் மீனை அருகில் அழைக்க முயன்ற போது, அது மின்னல் வேகத்தில் ஆழத்திற்கு சென்று விட்டது.
Gloria அந்த மீனின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். கல்லிற்குப் பின் பதுங்கியிருந்த அந்த மீனும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் அவ்வாறே கழிந்தது.
சிறிது நேரத்தில் அந்த மீன் Gloriaவின் கையை வந்தடைந்ததும். அளவு கடந்த மகிழ்ச்சியுடன் Gloria அம் மீனை வருடியவாளாக இருக்கையில் திடீரென வழுக்கி ஆற்றினுல் விழுந்தாள்.
மரு கனமே அந்த மீன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது.
எனினும் Gloria வினால் நீந்தத் தெரியாது. அவள் அவளை அறியாமலே தத்தளித்தவளாக நீருக்குள் மூழ்கினாள்.
திடீரென அங்கு வந்த ஒரு பெண் அவளை நீரிற்குள் இருந்து வெளியே எடுத்துச் சென்று தரையின் மீது வைத்ததாள்.
முதலுதவிகளினூடாக Gloria அருந்தியிருந்த நீரை வெளியேற்றியதும் மீண்டும் Gloria சுயநினைவிற்கு வந்தாள். கண்களை திறந்து பார்க்கையில் ஒரு தேவதை போன்ற ஒரு பெண் தன் முன் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டவளாய் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
Gloria : நீங்க....?!!!
என்று கையை அந்த பெண்ணின் முகத்தநோக்கி அசைத்தவளாக கேட்கையில்..