அன்று அவளது 18வது பிறந்த நாள். இரவு வானில் நட்சத்திரங்களை அவதானித்தவாளாக
அம்மா... அப்பா.. இது என்னோட eighteenth birthday.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க.. இந்த வருடம் நா கேற்க போற பரிசு.. உங்க இருவர்ல ஒருவரயாவது நான் கண்டு பிடிக்கனும்.. கூடவே தொடர்ந்து காணும் கனவின் அர்த்தம் தெரிஞ்சிக்கனும் .. எனக்கு உதவியாக இருங்க..
இரு கைகளையும் கூப்பி கண்களை இருக மூடியவளாக வேண்டிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவளது கட்டிலில் இயற்கை மாதா அமர்ந்திருந்தாள். Abelia அதிர்ச்சியடைந்தவளாக தான் மீண்டும் கனவா காண்கிறேன்.. எனினும் நான் தூங்கவில்லையே.. என கூறி மாதாவை பார்த்துக் கொண்டே இருந்தாள். மாதா சிரித்து விட்டு அருகில் வருமாறு கையை நீட்டினாள். Abelia அதிர்ச்சியினால் ஒரு அடியேனும் நகராமல் நின்றிருந்தாள்.
மாதாவே சிரித்தபடி அருகில் வந்து
என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இல்லை.. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. காரணம் நான் தான் உன் தாய்..
என அறிமுகம் செய்து கொண்டாள். Abelia தனது கையால் மாதாவின் கண்ணத்தை வருடியபடி
அம்மா.. ஆனால்..
என்ன.. தேவதையாக இருப்பது சந்தேகமா ??
ஹா.. அதுவும் எல்லா இரவும் உங்கள நா என் கனவில் காண்பேன்..
கனவல்ல .. நான் தினமும் உன்னை பார்க்க வந்தேன்..
அம்மா..
என்று கூறி அவளை கட்டி அனைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அனைப்பிலே கழிந்தது..
எனினும் நீங்க ஒரு தேவதை.. நா எப்டி உங்க மகளாவேன்..
உண்மையில் நான் உன்னை பெற்ற தாய் அல்ல. உன் தாய் உன்னை நீ பிறந்ததும் என்னிடம் தந்து விட்டு கடவுளிடம் சென்றார்..
அப்பா...???
நீ உன் தந்தையுடனே இவ்வளவு காலமும் வாழ்கிறாய்.. அம்மாவிற்கு நான் தான் பிரசவம் பார்த்தேன். நீ இவ்வுலகத்திற்கு பிறந்த விடயம் உன் தந்தைக்கு தெரியாது. நான் தான் உன்னை அவரிடம் ஒப்படைத்தேன்.
Abelia ஆச்சரியமாக மாதா கூறுவதை கேட்டாள். தந்தை இவரென அறிந்ததும் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு உடனே எழுந்து தந்தையை நோக்கி ஓடினாள்.
Lora.. என்னாச்சு..
Lora வின் நினைவிற்காக Wilson, Abelia விற்கு Lora என பெயர் வைத்தார். அவள் வேகமாக வந்து. மூச்சு வாங்கியவளாக
அப்பா.. நான் என் அப்பாவ கண்டுபிடிச்சுட்டேன்..
அதிர்ச்சியடைந்தவராக.
என்ன.. ?? நீ..
என கேட்கையில்
அவர் பெயர் Wilson..
என கூறினாள். மீண்டும் அதிர்ச்சியுடன்
Wilson..??!!
நீங்க தான் என்னோட சொந்த அப்பா..
என்று கூறி கட்டி அனைத்துக் கொண்டாள். எனினும் Wilson அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
உனக்கு எப்டி தெரியும்... நான் தான்னு..
வாங்க நா ஒர்த்தர ஒங்கள்க்கு காட்டி தாறேன்..
என்று கூறி அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
இதோ இவர் தான்.. அம்மாவிற்கு பிரசவம் பார்த்தது..
ஆனால் Wilson ற்கு யாருமே விளங்க வில்லை.
அங்க.. அங்க யாருமே இல்லயே...
இது.. எங்க முன்னாடி இருக்காங்களே.. எனக்கு தெரியிறாங்க.. யே உங்களுக்கு மட்டும்..
மாதா : ஏன்னா நா ஒரு தேவதை Abelia..
Abelia : Abelia ..??
மாதா : நான் உனக்கு வைத்த பெயர்.. ஒரு நிமிடம் இரு.. இதோ இதை உன் தந்தையிடம் கொடு...
என்று கூறி ஒரு மாலையை அவளது கையில் வைத்தாள்.
Abelia : இந்த மாலை...!!?
திடீரென ஒரு மாலை Lora வின் கைகளுக்குள் வந்ததை கண்டு
Wilson : இதூ எப்டி உன் கைக்கு வந்தது..
Abelia : ஹா ... இத பிடிங்க..
Wilson : இதூ... இது lora வின் மாலை.. அப்படின்னா.. இவங்க செல்வது..!!??
Abelia : உண்மை...