கதிரும் முல்லையும்

1.1K 43 2
                                    

கதிர் முல்லையின் போட்டோவை ஃப்ரேம் போட கண்ணனுடன் ஸ்டுடியோ வில் இருக்க,

போட்டோகிராஃபர் கணிணி யில் முல்லை போட்டோவை ஏற்ற,

கதிர் அவளை கண்கொட்டாமல் ரசிக்க,

கண்ணன் : அண்ணே! அண்ணிய சைட் அடிச்சது போதும். நாலு ஈ, அஞ்சு கொசு வாய்க்குள்ள போய்ருச்சுண்ணே. போட்டோகிராபரை வேல செய்ய விடுண்ணே!

கதிர் கண்ணன் தலையில் கொட்டி,

போட்டோகிராபரிடம், எல்லா போட்டோவையும் ஏத்திட்டிங்களா?  இனி இவன் நமக்கு தேவையில்லையே?

கண்ணன் : அடப்பாவி அண்ணா! இப்ப என்ன சொன்னேன்னு என்னை கழட்டி விடுற?

கதிர் : டேய்...! அப்ப பேசாம வாய மூடிட்டு கம்முன்னு இருக்கனும். வாய தெறந்தா அடி விழும்.

கதிர் மீண்டும் முல்லையை ரசிக்க,

கண்ணன் : ம்ம்.. நீ நடத்துண்ணே. எப்படி இருந்த,  இப்ப இப்படி ஆய்ட்ட..

கண்ணன் போன் அடிக்க, எதிர்முனையில் முல்லை.

கண்ணன் போனை பார்த்து, கதிரிடம் கொடுக்க நினைக்க,

சட்டென ஐடியா உதிக்க,

"அண்ணே நல்லா மாட்டின. என்னயவா அடிக்கற. இரு.உனக்கு இருக்கு இன்னிக்கு".

கண்ணன் சற்று தள்ளி நின்று,
சொல்லுங்க அண்ணி.

முல்லை : டேய் கண்ணா! எங்கடா இருக்க?

கண்ணன் : அண்ணி! கதிரண்ணே கூட வெளில வந்தேன்.

முல்லை : அவுக கூட இருக்காகளா ?
எங்க இருக்கீங்க? என்ன பண்றீக?

கண்ணன் : ஐயோ அண்ணி. அத ஏன் கேட்கறீங்க? அத எப்படி நான் சொல்றது? உங்க ஆளு இங்க ஒரு ஃபிகர சாரி அண்ணி ஒரு பொண்ண சைட் அடிக்கறாரு.
அதுவும் வச்ச கண்ண எடுக்காம பாக்குறாரு.என்ன கொடும அண்ணி?

முல்லை :(முறைப்புடன்) யாரு? உங்கண்ணன்? டேய்! ஓவரா பேசாத. அவருக்கு பொண்டாட்டிய சைட் அடிக்கவே தெரியலயாம். இதுல வேற பொண்ண சைட் அடிக்கறாராம்.போடா!

கதிரும் முல்லையும்Where stories live. Discover now