Weekend story....!
கதிரும் முல்லையும்.....!💗💗💗
Part - 1
முல்லை : "ஏங்க ஏன் இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கீங்க? நீங்க தான் படுத்த உடனே தூங்கிடுவியலே!"
கதிர் முல்லையை பார்த்து முறைக்க,
முல்லை அதை கவனிக்காதவள் போல,
"நீங்க என்ன யோசிக்கறீயன்னு சொல்லட்டுமா?"
கதிர் முல்லையை ஏறிட்டு பார்த்து, "எங்க சொல்லு பார்ப்போம்!"
முல்லை : "மாமா திடீர்னு நம்மளையும் கொடைக்கானல் போகச்சொல்லிட்டாரு. எப்படி போகாம இருக்கறதுன்னு தானே யோசிக்கறீய?"
கதிர் யோசனையாய் அவளைப் பார்த்து,
"நாம.... நானும் போயிட்டா அண்ணன் தனியா கஷ்டப்படும்ல. அதான் யோசிக்கறேன்."
முல்லை : "இல்லன்னா மட்டும் மொத ஆளா கிளம்பிருவியலாக்கும்?" நக்கலாக கேட்க,
அவன் முறைப்பதைக் கண்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.
கதிர் கடுப்புடன்,
"கொஞ்சம் பேச விட்டா போதுமே! உடனே ஓவரா பேசறது! உன்னை யாரு போவேனான்னு சொன்னா? நான் நா வர்றதைப்பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன்."
முல்லை கோவத்துடன்,
"ஏங்க ஹனிமூன்ன்னா ரெண்டு பேரும் தாங்க போகனும்."
கதிர் கடுப்பாக பார்த்து,
"அது எங்களுக்கும் தெரியும். நீங்க தூங்குங்க."முல்லை கோவமாக,
"ஏங்க ஏன் இப்படி சிடுசிடுன்னு விழறீய? சரியான சிடுமூஞ்சி! எப்பப் பார்த்தாலும் "கடை கடை"ன்னு இருக்காகளே வெளில போக வாய்ப்பு கிடைச்சிருக்கு. போலாம்னு நினச்சா ரொம்பத்தான் பண்றீய. போங்க போய் கடையை கட்டிக்கிட்டு அழுங்க. யாரு வேணாம்னா?"
முல்லை பொரிந்து தள்ள,
கதிர் பெருமூச்சு விட்டு
"நீ தாராளமா போ. உனக்கு இங்க ஒரே வீட்ல இருக்க போரடிக்கும். நா அப்படியா?! கடைல எவ்ளோ வேலை கிடக்கு. அண்ணன் பாட்டுக்கு போறியான்னு கேக்காம போயிட்டு வா ன்னு சொல்லிடுச்சு.என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். நீ வேற படுத்தாத."
முல்லை க்கு கோவம் தலைக்கேற எரிச்சலாக,
"திரும்பத்திரும்ப இதையே சொல்றீய. நா மட்டும் தனியா போய் என்ன பண்ண போறேன்? அவுக ரெண்டு பேரும் மட்டும் போகட்டும். எனக்கு போக விருப்பம் இல்லன்னு மாமாகிட்ட சொல்லிடறேன் போதுமா?"முல்லை கடுப்புடன் திரும்பி படுத்துக்கொள்ள,
கதிர் என்ன செய்வதென தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து, கதிர் மெதுவாக,
ஏய்....!
இந்தா....!
சற்று வேகமாக,
முல்ல!
முல்லை திரும்பி,
"ஓ... என்னைத்தான் கூப்பிட்டியலா?"கதிர் பொறுமையாய் பார்த்து,
"அண்ணியையும் கண்ணனையும் துணைக்கு கூட்டிட்டு போறியா?"
முல்லை ஆக்ரோஷமாக பார்க்க,
கதிர் : "இல்ல. எனக்கு தான் வேலை இருக்கு. என்னால நீ ஏன் போகாம இருக்கனும்?"
முல்லை கோவத்தை கட்டுப்படுத்தி,
"ஏங்க நீங்க புரிஞ்சி பேசறீயலா? புரியாம பேசறீயலா? எனக்கு புரியலங்க. நா அவங்ககூட ஏங்க போகனும்? நீங்க இங்க இருக்கும் போது நான் ஏன் போகனும்?
கதிர் : "ஏய்...நீ... நீதானே போகனும்னு ஆசப்பட்ட?'
முல்லை கண்களை குறுக்கி,
ஆசப்பட்டா.......?! நடந்துடுமா? உங்ககூட போகனும்னு கூட தான் ஆசைப்.... நினைக்கிறேன். உனே நடந்துடுமா? முல்லை தடுமாறி நிறுத்த,
கதிர் பெருமூச்சு விட்டு,
"அங்க... நாம அங்கப்போய் என்ன பண்ண போறோம்?"முல்லை : "ம்ம்.... அந்த ஊர்ல அரிசி மூட்டை என்ன விலை? பருப்பு மூட்டை என்ன விலைன்னு விசாரிக்கலாம்." இளக்காரமாக சொல்ல,
கதிர் : "உனக்கு ஓவர் கொழுப்புதான்."
சிறிது யோசித்து,
"சரி. நாம போலாம்."முல்லை கிண்டலாக,
"நாம அங்க போய் என்னங்க பண்ண போறோம்?"
கதிர் புருவத்தை உயர்த்தி, "எல்லாரும் ஹனிமூனுக்கு எதுக்கு போவாங்க?"
.......!தொடரும்