Weekend story.....!
கதிரும் முல்லையும்.....! 💗💗💗
Part - 1
முல்லை : "ஏங்க என் பிறந்த நாளுக்கு கிஃப்ட் கொடுக்கனும்னு தோணலையா?"
கதிர் கடைக்கு சென்று கிஃப்ட் எடுத்து வர,
முல்லை அறையில் இல்லை.
கிஃப்டை கட்டிலில் வைத்துவிட்டு பின்பக்கம் சென்றான்.
முல்லை முன்வாசலில் கதிரை எதிர்பார்த்து விட்டு அவனை காணாமல்
(எங்க போனாக இவுக? சே! கேக்காமலே இருந்திருக்கலாம். ஒருவேளை கிஃப்ட் வாங்க போய்ருப்பாகளோ?கடையெலல்லாம் மூடியிருக்குமே!)
யோசித்தபடியே அறைக்கு வர,
கட்டில் மேல் கிஃப்ட் இருப்பதை பார்த்து ஆச்சர்யமாகி ஆர்வமாக பாய்ந்து சென்றாள்.
கிஃப்டை எடுத்து ஆச்சர்யமாய் பார்த்த படி,
"அட! நிஜமாவே கிஃப்ட்டெல்லாம் வாங்கி வச்சிருக்காக....!"
மனம் சந்தோஷத்தில் துள்ள, ஆசையாய் பிரித்தாள்.
முல்லையை காணாமல் கதிர் அறைக்கு வர,
முல்லை கிஃப்டை பிரித்துக்கொண்டிருந்தாள்..
கதிர் கதவருகே நிற்க,
முல்லை கிஃப்டை பிரித்தாள். விதவிதமான ஜிமிக்கிகள் வெவ்வேறு சைஸில் இருக்க, கண்களை அகல விரித்து ஆச்சர்யப்பட்டாள்.
முகம் முழுதும் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, சந்தோஷத்தில் மனம் துள்ள, பரிசை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
("நம்ம நினச்ச மாதிரி இல்ல. நம்ம பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சு பரிசெல்லாம் வாங்கிருக்காக...! நாமதான் தப்பா புரிஞ்சிருக்கிறோம்.")
நினைக்கையிலேயே மனசு நிறைய,
மெதுவாக கண்களை திறந்து கண்ணாடியில் தன்னையே பார்த்து ரசித்தாள். ஆசையுடன் ஜிமிக்கியை மாட்டினாள். ஜிமிக்கி முடியில் சிக்கிக்கொள்ள,
ஷ்.... தலையை ஆட்டி எடுக்க முயற்சிக்க,
கதிர் அருகில் வந்து,