சரவணன் : அண்ணி! கதிர் அண்ணனுக்கும் சின்ன வயசுல இருந்து ஒரு பொண்ணு ப்ரண்டா இருக்காங்களாம். உங்களுக்கு தெரியுமா?
மூர்த்தியும் ஜீவாவும் ஒருவரையொருவர் பார்க்க,
குமரேசன் மாமாவும் சரவணனும் முல்லையை பார்க்க,
கதிர் சரவணனை முறைத்தபடி
முல்லையை ஓரக்கண்ணால் பார்க்க,
முல்லை கதிரைப் பார்த்து சிரித்தாள்.
முல்லை : டேய்! உங்க கதிர் அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரே பொண்ணும் நான்தான். அந்த சின்ன வயசு ப்ரண்டும் நானாதான் இருப்பேன். போடா!
அனைவரும் ஆச்சரியம் கலந்து முல்லையை பார்க்க,
கதிர் புன்னகையுடன் முல்லையை ஆழமாக பார்க்க, முல்லை சிரித்தாள்.
கதிர் முல்லையை பார்த்தபடி,
சரவணன் தலையை தட்டி,
டேய்! "அண்ணன் டெலிவரி நிறைய இருக்குன்னு சொன்னாருல்ல, நீ கிளம்புடா!"குமரேசன் மாமா : எலே மூர்த்தி! "உன் தம்பி என்ன சொல்றான்"னு புரியுதா? அவன் சரவணன மட்டும் போக சொல்லல. நம்ம எல்லாரையுமே கிளம்ப சொல்றான். ஏ... இந்த அசிங்கம் நமக்கு தேவையா? எலே! வாங்கடா போவோம்.
அனைவரும் சிரிக்க
கதிர் கண்களை சுருக்கி குமரேசன் மாமாவை பார்க்க,
முல்லை சிரித்தாள்.
அனைவரும் கிளம்ப,
குமரேசன் மாமா : அந்த புள்ளைய மிரட்டாதடா. அன்பா பேசு.
கதிர் : ஆங்... எங்களுக்கு தெரியும். நீங்க கிளம்புங்க.
எல்லாரும் சென்று விட,
கதிர் வந்து முல்லையின் அருகில் அமர்ந்து,
கதிர் : ஏய்... இப்பதானே வீட்டுக்கு போன. அதுக்குள்ள இந்த வெயில்ல ஏன் வந்த? கண்ணன் கிட்ட கொடுத்து விட வேண்டியதுதானே.
முல்லை : இல்லங்க. பரவாயில்ல. கடைக்கு வந்து ரொம்ப நாளாச்சுல்ல. அதான்.