கதிரும் முல்லையும்

436 51 5
                                    

கதிர் ஐய்யய்யோ!

என்ன இவ போனை வச்சிட்டா?

என்ன பண்றது?

எல்லாம் இவனால வந்தது என்றபடி கண்ணனை பார்த்து முறைத்து,

முல்லையை நினைத்து சிரித்தான்.

என்னா கோவம் வருது இவளுக்கு?!

அழகி!

இவ வீட்ல என்ன சொல்லி வைக்கப்போறாளோ?

பாவம். ரொம்ப கடுப்பேத்திட்டமோ!

சிரித்தபடி,
போட்டோவோட போய் சமாதானப் படுத்துவோம்.

வீட்டிற்கு இருவரும் வர,
தனம்,

முல்லை இருவரும் முற்றத்தில் அமர்ந்திருக்க,

(போச்சு. மாட்னடா கதிரு.)

தனம் அவர்களை பார்த்து,

ம்ம்.. வாங்கடா..

உங்களுக்காக தான் காத்திட்டிருக்கோம்.

கதிர் முல்லையை பார்க்க, அவள் கதிரை எரிப்பது போல பார்க்க,

பொங்கி வந்த சிரிப்பை மறைக்க கதிர் தலைகுனிய

தனம் : செய்யறதும் செஞ்சிட்டு இப்ப என்னடா தல குனிஞ்சு நிக்கற? .

(கதிர் நிமிர்ந்து ஒன்றுமில்லை என்றபடி தலையசைத்து முல்லையை குறும்புடன் பார்க்க)

கதிரு!  நீயாடா இப்படி எல்லாம்? நம்பவே முடியலடா. என்ன பழக்கம் இதெல்லாம்? மாமாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமில்ல.

முல்லையை கடுப்புடன், அக்கா என்ன விசாரிக்கிறீய? யார் அந்த ரதி ன்னு கேளுங்க.

(இங்க இருக்கவங்களா பாத்தா மனுஷியா தெரியல) என முணுமுணுக்க,

கதிர் புன்னகைக்க,(அழகி.கோவத்துல கூட என்ன அழகா இருக்கா. இவ்ளோ நாள் தெரியாம போச்சே.)

தனம் : பேசுடா.

கதிர் : அண்ணி! அது வந்து....

தனம் : என்னடா

கதிருக்கு எப்படி சொல்வதென்று தெரியாமல் முல்லையை பார்க்க,

கதிரும் முல்லையும்Where stories live. Discover now