கதிரும் முல்லையும்

361 43 3
                                    

கதிரின் தவிப்பை உள்ளுக்குள் ரசித்தவள்

இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி,

முல்லை : (குறும்புடன்) ஏங்க! அப்ப ஒரு முத்தம் தர்றியலா? சொல்றே........

முடிப்பதற்குள்

ப்ச்...........!

முல்லையின் கன்னத்தில் கதிரின் இதழ் அழுத்தமாகப் பதிய

முல்லை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கதிரைப் பார்த்தாள்.

வெட்கத்துடன்,

என்..னங்க? பட்டுனு குடுத்துட்டிய?

கதிர் : முத்தம் மட்டுமல்ல. இந்த கதிர் மொத்தமும் உனக்கு தான். போதுமா?! இப்ப சொல்லு!

?!

(ஐய்யய்யோ! உணர்ச்சி வசப்பட்டுட்டியே கதிரு! என்னாச்சு உனக்கு? நீயாடா இப்படியெல்லாம் பேசற? ம்ம்..... அ... அவ... அவதானே கேட்டா... இவ்ளோ பக்கத்துல வேற நிக்கறா. குடுக்காம எப்படி? இவ்ளோ நேரம் குடுக்காம இருந்ததே பெருசு. என்ன சொல்வாளோ?)

கதிர் தவிப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும் போதே

(இந்த கதிர் மொத்தமும் உனக்கு தான். போதுமா?!

கதிரின் வார்த்தைகள் காதுக்குள் திரும்பத்திரும்ப தேனாக இனிக்க,
முல்லை நெகிழ்ந்து போய் கண்களில் நீர் வழிய பார்த்தாள்.)

கதிர் : (பதறி) ஏய்.... ! ஏன் அழற? நான்..... நா......

(சந்தோஷமாக கண்ணீரை துடைத்தவள்)

முல்லை : (வேகமாக) இல்லங்க. நான் அழல.

முல்லை கண்ணீருடன் சிரிக்க,

கதிர் நிம்மதி பெருமூச்சுடன்,
சரி! இப்ப.... இப்பவாவது சொல்லேன்.

முல்லை : ஏங்க! ஏன் இப்படி பதர்றிய?

கதிர் : (சலிப்புடன்) ஏய்....  நான் யாரையும் தப்பா எதுவும் பேசிடலல்ல?

முல்லை புன்னகையுடன்,

உங்களால எந்த நிலையிலும் யார பத்தியும் தப்பா பேச முடியாதுங்க.

கதிர் : இல்லல்ல. அப்பாடா.....! (மார்பை தடவியவாறு)

முல்லை சிரித்தாள்.

கதிரும் முல்லையும்Where stories live. Discover now