கதிரும் முல்லையும்

305 35 2
                                    

Weekend story

கதிரும் முல்லையும்....! 💗💗💗

பாப்பா ஊருக்கு வரும் முன்தினம்,

இரவு அறையில்

கதிர் பாயில் அமர்ந்து தனியே சிரித்துக்கொண்டிருக்க,

முல்லை கடுப்புடன்  உட்கார்ந்திருக்க,

முல்லை : ஏங்க! இன்னும் தூங்காம என்ன செய்யறீய?

கதிர் : இல்ல. தூக்கமே வரல. பாப்பாவை எப்ப பார்ப்போம்ன்னு இருக்கு.

முல்லை : (பாப்பா...! பாப்பா...! பாப்பா....!) கடுப்புடன், "அவ்ளோ அக்கறை இருந்தா, திருச்சிக்கே போய் கூட்டிட்டு வரவேண்டியதுதானே."

கதிர் : தாடியை தடவியபடி,

"ஹூம். அப்படித்தான் நினச்சேன். கடைல கொஞ்சம் வேலை ஜாஸ்தி ஆய்டுச்சு." ம்ம். பரவால்ல.
"காலைல ஃப்ரஷ் ஆ பாக்கலாம்." "பார்த்து எவ்ளோ நாளாச்சு?!"

முல்லை எரிச்சலுடன்,

"எனக்கு தூக்கம் வருதுங்க. நா தூங்க போறேன்."

முல்லை படுக்க,

கதிர் புன்னகைத்து,

கதிர் : ஏய்...! அதுக்குள்ள தூங்க போறியா? ப்ச்...! கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்ன்னு நெனச்சேன்.

முல்லை : ம்ம்! கொஞ்சி பேசத்தான் காலைல அவ வருவாளே. அப்புறம் என்ன?! அவகிட்டயே பேசுங்க.

கதிர் : (சிரித்து) பின்ன, உன்கிட்டயா கொஞ்சி பேசுவாங்க? நா "கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்"ன்னு சொன்னேன்.

முல்லை : ஏங்க! "ரொம்ப ஓவராத்தான் போறீய! அவ்ளோதான் சொல்லுவேன்."

கதிர் மறு பக்கம் திரும்பி சிரித்து,

கதிர் : ஏய்....! அப்பறம்....  காலைல அவளுக்கு பிடிச்ச தக்காளி சட்னிய...

முல்லை : "ஏங்க பேசாம படுங்க.!"

கதிர் முல்லையை நினைத்து சிரித்துக்கொண்டே தூங்க போக,

முல்லை மனசுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.

(அவ வரட்டும். நாளைக்கு இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்.
மனம் ஆறாமல் புரண்டு புரண்டு படுத்தவாறே "எப்படி இருப்பா? இவுக மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? எல்லாரும் சொல்றாக." "இவுகளும் ஒரு மார்க்கமா தான் இருக்காக....!" எப்படி கண்டு பிடிக்கறது?)

கதிரும் முல்லையும்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon