Weekend story.....!
கதிரும் முல்லையும்.....!💗💗💗
Part - 1
கொடைக்கானல் ட்ரிப்!
முல்லை : "ஏங்க! நீங்களாவது சைக்கிள்ல போங்க. நா நடந்து வரேன்."
கதிர் : "அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நடந்தே போலாம்."
முல்லை கடுப்புடன் மெல்ல, "நடந்து போறதுக்கு சைக்கிளை வச்சிட்டு வந்திருக்கலாம். வேற யாருக்காவது பயன்பட்டிருக்கும்."
கதிர் சற்று எரிச்சலாக, "நா சைக்கிள் எடுக்க சொன்னேனா? நா.... அப்படியே மெதுவா நடந்து போலாம்னு நினச்சேன்."
முல்லை : "ஏங்க இப்ப மட்டும் என்ன பண்றீய? நடந்து போய்ட்டு தானே இருக்கோம்?"
கதிர் : "ஏய்....! ரெண்டு பேர் மட்டும் கொஞ்ச தூரம் நடக்கலாம், சைக்கிள் வேணாம்னு சொல்ல நினச்சேன்."
முல்லை ஆச்சர்யமாகி, "ஏங்க நீங்களாங்க?! (பெருமிதமாக பார்த்து), நம்பவே முடியலங்க.
கதிர் மெதுவாக முணுமுணுத்து, "(ஆமா! என்னை நம்பவே நம்பாத...!)"
தொண்டையை செருமி,
"ஏ... நீதான் நைட் கொஞ்ச தூரம்
போலாம்னு சொன்னல்ல. அதான்...."முல்லை : "ஓ.... அப்படி.... ம்ம். கொஞ்ச நேரம் நின்னுட்டாவது போலாங்க."
இரண்டு பேரும் நிற்க,
தனமும் கண்ணனும் வர,
"ஏன் ரெண்டு பேரும் நிக்கறீய?"
கதிர் : ஒண்ணுமில்ல அண்ணி. சும்மா தான்.
முல்லை கதிரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே,
"கால் வலிக்குதுக்கா."
கண்ணன் : "ஓஹோ...! அண்ணன் சைக்கிள் ஓட்டினா உங்களுக்கு கால் வலிக்குதோ?"
முல்லை கடுப்புடன், "டேய் தள்ளிகிட்டு வந்தா கால் வலிக்காதா?"
தனம் அதிர்ச்சியாக, "என்னது? சைக்கிள்ல தள்ளிகிட்டு வந்தீங்களா?
தனம் சைக்கிளை ஆராய்ந்தபடி,
"ஏன் சைக்கள்ல ஏதும் பிரச்சனையா?"