கதிரும் முல்லையும்....!💗💗💗
Part 2 (End)
இருவரும் ஒரு சேர "டேய்....!"
கண்ணன் ஜெர்க் ஆகி முழிக்க,
மூர்த்தி இருவரையும் சந்தேகமாய் பார்த்து,
"ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியாய்டும். நீங்க சந்தோஷமா இருந்தாதான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும். பார்த்துக்கோங்கப்பா...!"
சொல்லி விட்டு வெளியே செல்ல,
கதிரும் முல்லையும் ஒருவரையொருவர் பார்க்க,
கண்ணன் : என்ன நடக்குது இங்க?
கதிர், கண்ணன் தலையை தட்டியவாறு "டேய்...! ஒண்ணும் நடக்கல. நீ உன் வேலையை பாரு. சும்மா வழவழன்னு பேசிகிட்டு."முல்லையிடம் தலையாட்டிவிட்டு கடைக்கு கிளம்பினான்.
முல்லை கதிர் செல்வதைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
கண்ணன் : "அண்ணி! உங்க ஆளு கடைக்குத்தான் போறாக. ராத்திரி வந்துருவாக.. இப்படி பாக்கறீய?"
முல்லை வெட்கத்துடன், "போடா!" என்றபடி உள்ளே சென்றாள்.
இரவு
அனைவரும் சாப்பிட்ட பின்
கதிர் அறைக்கு வர,முல்லை போன் பேசிக்கொண்டிருந்தாள்.
கதிர் சுவற்றில் சாய்ந்தபடி கீழே அமர,
முல்லை போனை வைத்துவிட்டு கதிருக்கு எதிரில் அமர்ந்தாள்.
முல்லை : அம்மாங்க.
கதிர் தலையாட்டி மெல்ல புன்னகைத்தான்.
பின் சற்று தயங்கி,
"நேத்து எப்போ.... வந்தீங்க? கேக் எல்லாம் வெட்டி இருக்கீங்க?!"முல்லை முறைப்புடன், "நேத்து நீங்க எங்க போய்ருந்தீங்க?"
கதிர் கண்களை குறுக்கி,
"கேள்வி கேட்டா பதில் சொல்ற பழக்கமே இல்லையா?"
முல்லை கோவத்துடன்,
"ம்? நேத்து சாய்ங்காலம் நானும் அப்பாவும் வந்தோம். வீட்ல எல்லாரும் ஒருத்தருக்காக காத்திருந்தோம். போன் பண்ணினாலும் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தாக. அப்பறம் என்ன பண்றது?அதான் அவுக இல்லாமையே கேக் வெட்ட வேண்டியதாப் போய்டுச்சு."