Weekend story.....!
கதிரும் முல்லையும்....!💗💗💗
Part - 2 (The End)
கதிர் பொறுமையிழந்து, "போடி!போ! யாரு வேணாம்னு சொன்னா....?!"
முல்லைக்கு ஆத்திரம் அதிகமாக,
"அதானே! இவ எப்படா போவான்னு காத்திட்டிருவங்ககிட்ட போய் சொன்னேன் பாரு, என்னை சொல்லனும். நான் பேசாம எங்கம்மா கூடவே கிளம்பி போய்ருக்கனும்."
கதிருக்கு கொஞ்சம் கோவம் தணிய,
"இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு? நீயாதான் "போறேன்"னு சொன்ன! உன்னை "போ" ன்னு நான் சொன்னேனா?""கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி விளக்கமா சொல்றேன். திரும்பத்திரும்ப அங்கேயே நிக்கற. உங்கம்மாவை ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்ளோ கோவம் வருதுல்ல, உங்கம்மா எங்க அம்மாவையும் அண்ணியையும் பேசுனது சரியா? அவங்க கொடைக்கானல்க்கு வந்ததுல உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சனை? உங்கம்மாவை யாரும் கட்டாயப்படுத்தி இங்க இருக்க சொல்லலையே! அவங்க "முடியாது"ன்னு சொல்லிருந்தா அண்ணி நிச்சயம் நம்ம கூட வந்திருக்க மாட்டாங்க. இவ்ளோ ஏன்? "அத்தையை பாத்துக்க ஆளில்ல. நாம வேணா இருந்துக்கலாம்னு நீ ஏன் சொல்லல?" உங்களுக்கெல்லாம் ஒரு நியாயம், எங்க அண்ணிக்கு ஒரு நியாயமா? அவங்களுக்கு எந்த விருப்பமும் ஆசையும் இருக்கக்கூடாது அப்படித்தானே?!'
கதிர் நீளமாக பேசி முடிக்கமுல்லை கண்களில் நீர் ததும்ப என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
கண்களில் நீருடன் இருப்பவளைப் பார்த்து மனம் இளக,
"நான் உன்னை குறை சொல்லல."குற்ற உணர்வுடன்,
"நான் இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்தகருக்காது. தப்பு என் மேலேயும்தான். நான் கொடைக்கானல் வந்திருக்கக்கூடாது."
முல்லை எதுவும் பேசவில்லை.
கதிருக்குள் ஏதோ பாரமாய் அழுத்த , "சரி. இப்ப ஏன் அழற? நான் என்னதான் செய்யனும்?"
முல்லை கண்களை துடைத்துக்கொண்டு,
"உங்க அண்ணி மேல இருக்கற அக்கறைல கொஞ்சமாவது பொண்டாட்டி மேல இருக்கா!"