கதிரும் முல்லையும்

343 40 14
                                    

திருமணத்தின் போது,

முல்லை அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ள,

அனைவரும் கதவை திறக்க முயற்சிக்க

கதிர் கதவை உடைத்து வேகமாக உள்ளே நுழைய,

முல்லை கால்களை கட்டிக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தாள்.

முருகனும் பார்வதியும் முல்லையை கட்டிப்பிடித்து அழுதனர்.

அனைவரும் ஆறுதல் சொல்ல,

பார்வதி அனைவரையும் திட்டி வெளியே அனுப்ப,

கதிர் முல்லையை பார்த்தவாறு நிற்க,

பார்வதி ஆக்ரோஷமாக கதிர் சட்டையை பிடித்து,

பார்வதி : "டேய்... ஏண்டா இங்க நிக்குற? போடா... போ! போய் குடும்பமா சந்தோஷமா இருங்க. நாங்க குடும்பத்தோடு சாகறோம். உங்கம்மா பழச எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என் பொண்ண பழி வாங்கிட்டாங்கல்ல, நா வயிறெரிஞ்சி சொல்றேன். நீங்கல்லாம் நல்லா இருக்க மாட்டிங்க. நல்லாவே இருக்க மாட்டிங்க." கண்ணீருடன் கத்த

கதிர் கோவத்துடன் பார்வதியை பார்க்க,

முருகனும் முல்லையும் கதிரை பார்த்தனர். கதிர் முறைத்தபடி எதுவும் பேசாமல் நிற்க

பார்வதியை கதிரிடம் இருந்து விலக்கியபடி,

முருகன் கலங்கிய கண்களோடும் கனத்த இதயத்தோடும் கதிரை பார்த்தார்.

"பார்வதி! என்ன பேசற நீ? ஜீவா மாப்ள பண்ணதுக்கு கதிர் மாப்ள என்ன பண்ணுவாரு? விடு பார்வதி. இப்பவாவது உண்மை தெரிஞ்சதே. இதுவே இன்னும் அரைமணி நேரம் கழிச்சு தெரிஞ்சிருந்தா நம்ம பொண்ணு வாழ்க்கை என்னாயிருக்கும்? யாராவது நிம்மதியா இருக்க முடியுமா? விடு. எல்லாம் நல்லதுக்குத்தான்.

கதிர் மாப்ள!
"நீங்க போங்க. நடக்க வேண்டியதை பாருங்க. நாங்க கிளம்பறோம்."

கதிரின் மனதை முருகனின் கண்ணீர் கரைக்க,

தரையை பார்த்தவாறு,

"இங்க யாரும் வேணும்னு எதுவும் பண்ணல. இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கல. யாருக்கும் எதுவும் புரியல. பழி வாங்கற பழக்கமெல்லாம் இங்க யாருக்கும் இல்ல."

கதிரும் முல்லையும்Where stories live. Discover now